காரசாரமான வஞ்சரம் மீன் ப்ரை செய்வது எப்படி ?

Summary: அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே மிகவும் பிடிக்கும். அந்தவகையில் சிலருக்கு மீனை ப்ரை செய்து சாப்பிடத்தான் பிடிக்கும். அப்படி ப்ரை பிடிக்குமானால் வஞ்சீரம் மீனை வாங்கி அதனை ப்ரை செய்து சாப்பிடுங்கள். இங்கு வஞ்சரம் மீன் வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • ¼ கிலோ வஞ்சீரம் மீன்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மீனை நன்றாக கழுவி வைக்கவும். பிறகு சிறிதும் தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு பவ்ளில் மீன் சேர்த்து அதனுடன், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள்,எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறி 2 மணி நேரம் ஊற விடவும்.
  3. மீன் நன்றாக ஊறியதும், அடுப்பில் கடாய் அல்லது தோசை கல் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்,மிதமான சூட்டில் வைத்து 2 அல்லது 3 மீன் துண்டுகளை எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
  4. 5 நிமிடம் கழித்து மீனை திருப்பி போட்டு வறுக்கவும். இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
  5. இதே போல் மற்ற மீன் துண்டுகளையும் வறுத்து எடுக்கவும்.
  6. இப்பொழுது சுவையான வஞ்சீரம் மீன் வறுவல் ரெடி.