தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

Summary: இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் அல்வா விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். மாம்பழ சுவையானது என்பதால், இதை எப்படி தயாரித்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக மாம்பழத்தைக் கொண்டு அல்வா தயாரித்தால், அதன் சுவை இன்றும் அலாதியாக இருக்கும். மாம்பழ அல்வா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். கோடைக்காலத்தில் மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய பழத்தில் ஒன்று மாம்பழம். எனவே மாம்பழத்தில் அல்வா செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரையும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் மகிழ்விக்கலாம்.

Ingredients:

  • 1 மாம்பழம்
  • 1 கப் ரவை
  • 3/4 கப் சர்க்கரை
  • 1 சிட்டிகை உப்பு
  • 1/4 கப் நெய்
  • முந்திரி, திராச்சை

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு முந்திரி, திராட்சை இவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு அதே நெய்யில் ரவையை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  3. பிறகு மாம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
  4. பிறகு வாணலியில் தண்ணீர் ஊற்றி உப்பு, நெய் விட்டு கொதிக்க விடவும். இதில் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து கிளறி விட்டு கட்டிகள் இல்லாமல் கலந்து விட்டு நெய் சேர்த்து கிளறி விடவும்.
  5. ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு இதில் நாம் அரைத்து வைத்துள்ள மாம்பழத்தை சேர்த்து கலந்து விட்டு நெய் இடை இடையே சேர்த்து கொள்ளவும்.
  6. கடைசியாக வறுத்த முந்திரி திராட்சை தூவி கலந்து விட்டு இறக்கவும்.
  7. அவ்வளவுதான் சுவையான மாம்பழ சுவையில் அல்வா தயார்.