Summary: பொதுவாக மீன் குழம்பு என்றாலே அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊரும். அதிலும் கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு செய்தால் சொல்லவே வேண்டாம். அவ்வளவு சுவையாக இருக்கும். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ருசி இருக்கும். அதேபோல் கேரளாவில் மத்தி மீன் மிகவும் பிரபலம். மண் சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மணக்க மணக்க மீன் குழம்பு வைத்து அதை கிட்டத்தட்ட 1 வாரத்திற்கு வைத்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் கேரளா ஸ்பெஷல் மீன் குழம்பு செய்வதற்கான செய்முறையை தெரிந்துக் கொள்ளலாம். கேரளாவில் கடற்கரை அதிகம் இருப்பதால் மீன் உணவுகள் அவர்களின் பிரதான உணவு பட்டியலில் இடம் பிடிக்கின்றன. இந்த பதிவில் கேரளா ஸ்டைல் மீன் குழம்பு வைப்பது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம். கேரளாவில் உள்ள மக்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் அசைவ உணவுகளில் மீன் தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் தான் மீன்களில் பலவிதமான உணவு வகைகளை அவர்கள் சமைத்து உண்பார்கள். கேரளா ஸ்டைலில் குடம்புளி மீன் குழம்பை எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்வோம்.