சுட சுட சாதத்துடன் பிரட்டி சாப்பிட ருசியான நெல்லிக்காய் துவையல் இப்படி செஞ்சி கொடுங்க!

Summary: உணவே மருந்து” என்ற வார்த்தைக்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை சமைத்துக் கொடுத்தால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. ஆனால் அவ்வாறு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவுப்பொருட்களை எவரும் விரும்பி உண்பதில்லை. அந்த வகையில் நெல்லிக்காய் மற்றும் இஞ்சியில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பல இருக்கின்றன. ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் 3 ஆப்பிள்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. அந்த வகையில் இந்த இஞ்சி மற்றும் நெல்லிக்காயை வைத்து ஒரு சுவையான துவையல் அரைத்துக் கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் தட்டாமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 5 பெரிய நெல்லிக்காய்
  • 3 வர ‌மிளகாய்
  • எண்ணெய்
  • 2 பச்சை மிளகாய்
  • 4 பல் பூண்டு
  • புளி
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு தேவையான அளவு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் நெல்லிக்காயை கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிதளவு கல் உப்பு மற்றும் வரமிளகாய், சீரகம், வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய நெல்லிக்காயை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
  4. பின்னர் வதக்கி வைத்துள்ள அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு புளி வைத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  5. அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான நெல்லிக்காய் துவையல் தயார்.