சூப்பரான சேனைக்கிழங்கு பொடிமாஸ், சேனைக்கிழங்கை இப்படியும் பொடிமாஸ் செய்து சாப்பிடலாம், ருசி நாக்கிலேயே நிற்கும்.

Summary: உடலுக்கு எல்லா சத்துக்களும் சம அளவுல கிடைக்கணும். அப்படி எல்லாம் உணவு பொருளையும் சமமா எடுத்துக்கணும். அப்ப மாவு சத்து கிடைக்கணும் அப்படின்னா நம்ம நிறைய கிழங்கு வகைகளை குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களும் சரி எல்லாருமே எடுத்துக்கிறது ரொம்பவே நல்ல விஷயமா இருக்கும். வேகவச்ச கிழங்கு பிடிக்காத குழந்தைகள் நிறைய பேர் இருப்பாங்க. அப்படி இருக்கிற குழந்தைகளுக்கு கிழக்குகளை எப்படி வேற மாதிரியான உணவுகளா மாத்தி கொடுக்கணும் அப்படிங்கறது நிறைவே யோசிக்கணும்.

Ingredients:

  • 1/4 கிலோ சேனைக்கிழங்கு
  • 3 வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சேனைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு கழுவி சேனைக்கிழங்கை துருவி எடுத்துக் கொள்ளவும். துருவிய சேனைக்கிழங்கில் உப்பு சேர்த்து பிசறி எடுத்து தனியாக வைத்து விடவும்.
  2. பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு கொஞ்சம் கூடுதலாக எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. பின் துருவி வைத்துள்ள சேனைக்கிழங்கை பிழிந்து விட்டு நீரை எடுத்த பிறகு வெறும் சேனைக்கிழங்கு துருவலை மட்டும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  4. சேனைக்கிழங்கு வதங்கி கொண்டிருக்கும் பொழுதே வேறு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல் காய்ந்த மிளகாய், சீரகம், தனியா விதைகளை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. வறுத்தெடுத்துள்ள பொருட்கள் ஆறிய பிறகு அவைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும். சேனைக்கிழங்கு வெந்த பிறகு அதில் பொடித்து வைத்துள்ள மிளகாய் , சீரக, தனியா பொடியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  6. பொடியை சேர்த்து நன்றாக மொழி மாறுவதன் வெந்த பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு இறக்கினால் சுவையான சேனைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.