ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

Summary: உடல் சூட்டை தணிக்க நமக்கு கம்பங்கூழும், கேப்பைக்கூழும், பழைய சோறும் என்பது போன்று குழந்தைக்கு குளிர்ச்சியளிக்க கேழ்வரகு மில்க் ஷேக் போதும். பிறந்த குழந்தைக்கு பழக்கும் உணவுகள் அவர்கள் வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். அதோடு ஒவ்வொரு உணவையும் சரியான மாதத்தில் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். இந்த ஆறு மாத குழந்தைக்கு அவர்கள் உடல் உஷணத்தை தவிர்க்கும் வகையில் கேழ்வரகை அறிமுகம் செய்யலாம். கேழ்வரகு உணவுகளை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிட்டு வருவது உடலுக்கு பல நன்மைகளை செய்கின்றது. கேழ்வரகு சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இந்தவிதத்தில் செய்து கொடுக்கலாம். கேழ்வரகில் செய்தது என கண்டுபிடிக்கவே முடியாத சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1/4 கப் கேழ்வரகு மாவு
  • 3 டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர்
  • 1 வாழைப்பழம்
  • 3/4 கப் பால்
  • 4 ஏலக்காய்
  • சர்க்கரை

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கண்ணாடி டம்ளர்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு மற்றும் ‌கொக்கோ பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும்.
  3. சற்று நேரத்தில் கெட்டியாகி விடும். ஒரு நிமிடத்தில் சிறிது கட்டியாக மாறிய வந்ததும் அடுப்பை அணைத்து நன்றாக ஆற வைக்கவும்.
  4. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
  5. இது நன்கு ஆறியதும் ஒரு‌ மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனுடன் வாழைப்பழம், சர்க்கரை, ஏலக்காய், பால் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
  6. பிறகு இதனை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி மேலே சிறிது கொக்கோ பவுடர் தூவி பரிமாறவும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த முறையில் செய்து அருந்தலாம்.
  7. அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு மில்க் ஷேக் தயார்.