வாய்க்கு ருசியான இட்லி மிளகாய் பொடி செய்வது எப்படி ?

Summary: இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் என சாப்பிடுவதை விட அவ்வப்போது இது போன்ற இட்லி பொடியையும் சேர்த்து கொள்ளவும். இந்த பொடியை அரைத்து வைத்துக் கொணடால் 3-4 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். சாம்பார், சட்னி செய்வதற்கு நேரம் இல்லையென்றால் அப்பொழுது இந்த பொடியுடன் சேர்த்து சாப்பிடுங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். குறிப்பாக உங்கள் வீட்டில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1½ கப் வெள்ளை உளுத்தம் பருப்பு
  • ½ கப் கருப்பு உளுந்து
  • 10 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 6 டீஸ்பூன் எள்
  • உருவிய கருவேப்பிலை
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய தட்டு

Steps:

  1. முதலில் வெறும் வாணலியில்அடுப்பில் வைத்து எள்ளை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
  2. பிறகு வாணலில் எண்ணெய் விட்டு முதலில் கடலைப் பருப்பு, பிறகு கருப்பு உளுந்து, பிறகு காய்ந்த மிளகாய், வெள்ளை உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து, இறுதியில் கருவேப்பிலையும் போட்டு வறுத்து தேவையான உப்பு சேர்த்து இறக்கிவிடவும்.
  3. சற்று ஆறிய பின் மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  4. காற்றுப்படாத டப்பாவில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்.