வட இந்தியாவில் ஸ்பெஷலான ரேஷ்மி சிக்கன், அட்டகாசமா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

Summary: ரேஷ்மி சிக்கன சாதத்துக்கு சப்பாத்திக்கு தோசை எல்லாத்துக்குமேசேர்த்து சாப்பிடலாம்.  ஒரு ஒரு ஊருக்கு ஒரு.ஒரு வகையான உணவுகள் ஸ்பெஷலா செய்வாங்க.அந்த மாதிரி இது வட இந்தியாவில் ரொம்பவே பேமஸ் ஆன ஒரு உணவு வகை. இந்த ரேஷ்மி சிக்கன்ரொம்பவே சுவையா இருக்கும். சிக்கன் உணவுகள் சுவையான உணவுகள் மட்டும் கிடையாது அதிகஅளவு புரதச்சத்துள்ள ஒரு உணவு. கிடையாது சிக்கன் சமைக்கும் பொழுது சிக்கனை தயிர்ல ஒருபத்து நிமிஷம் ஊறவெச்சு சமைக்கும்போது சீக்கிரமா நல்லா சாப்டா வேகறது மட்டுமில்லாமல்நல்ல ருசியையும் கொடுக்கும்.

Ingredients:

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 கப் தயிர்
  • 1 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 2 பச்சைமிளகாய்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 12 எலுமிச்சைபழம்
  • 1 வெங்காயம்
  • 15 முந்திரி
  • 1 பிரிஞ்சிஇலை
  • கொத்தமல்லி
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு சுத்தம் செய்துஎடுத்து வைத்துள்ள சிக்கனில் தயிர் ,கஸ்தூரி மேத்தி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துநன்றாக பிசறி கொள்ள வேண்டும்.
  2. பிறகு அதில் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள்  , மிளகாய் தூள்சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும. பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசறி ஒரு 15 நிமிடம்ஊற வைக்கவும்.
  3. பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அதனோடு முந்திரிப் பருப்பை சேர்த்து விழுதாகஅரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய முந்திரி விழுதை சேர்த்து நன்றாக ஒரு பத்து நிமிடம்வதக்கவும்.
  5. பின்பு மசாலாவோடு கலந்து ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு தண்ணீர் சேர்க்காமல் மூடிபோட்டு வேக வைக்கவும்.அவ்வப்போது மூடியை திறந்து சிக்கனை கலந்து விட்டு நன்றாக வேகவைக்கவும்.
  6. சிக்கன் வெந்த பிறகு அதில் கொத்தமல்லி தழைகளை தூவிஇறக்கினால் மிகவும் ருசியான கிரீமியான ரேஷ்மி சிக்கன் தயார்.