மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான ராகி கார கொழுக்கட்டை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: ராகி கொழுக்கட்டை சுவை மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி வகை. இதனை விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, போன்ற நாட்களில் இறைவனுக்கு செய்து படைக்கலாம். இது தவிர மற்ற நாட்களிலும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக வழங்கலாம். மாலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ராகி கொழுக்கட்டை செய்து கொடுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது கேழ்வரகு கொழுக்கட்டை என்றும் கூறப்படுகிறது. இதனை மிகச் சுலபமான முறையில் செய்யலாம் புதிதாக சமையல் கற்றுக் கொள்பவர்கள் மற்றும் கொழுக்கட்டை செய்பவர்கள் கூட மிகச் சுலபமான முறையில் இதனை செய்து முடிக்கலாம்.

Ingredients:

  • 1 கப் ராகி மாவு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் உளுந்துப்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி தழை
  • எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் மற்றும் மல்லி இலையை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
  3. பிறகு அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.
  4. பின்னர் அதில் ராகி மாவை சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  5. அதன்பிறகு ராகியை நன்கு கலந்து தேங்காய் துருவல் சேர்த்து பின் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
  6. ராகி கொழுக்கட்டை கலவை சூடு ஆறியவுடன் கொஞ்சமாக எடுத்து, கையால் அழுத்தி கொழுக்கட்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
  7. இட்லி சட்டியை அடுப்பில் வைத்து அதில் நாம் பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டையை ஆவியில் பதினைந்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி கொழுக்கட்டை தயார்.
  8. இப்போது இந்த கொழுக்கட்டைகளை ஒரு பவுளுக்கு மாற்றி மேலே தேங்காய் துருவல் தூவி அலங்கரித்தால் ஆரோக்கிய உணவான ராகி கொழுக்கட்டை தயார்.