ருசியான வெந்தயக் கீரை கிரேவி இப்படி செஞ்சு பாருங்க! குக்கரில் 1 விசில் வந்தால் போதும். ஆளை தூக்கும் வாசத்தில் அசத்தலான கிரேவி ரெடி உடனே ரெடி!

Summary: ஒரே ஒரு விசில் வைத்தால் போதும், குக்கரில்வேலை முடிந்தது. சட்டுன்னு செய்திடலாம். வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சக்தியும்,சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண் பார்வை குறைபாடு,வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை ஆகியவை குணமடையும். வெந்தயக் கீரையின் தண்டை அரைத்து,மோருடன் குடித்துவர, வயிறு தொடர்பானப் பிரச்னைகள் தீரும்.சப்பாத்தி, ரொட்டி, நான்,வெரைட்டி சாதத்திற்கு பக்காவான சைடிஷ் இது. தேவைப்பட்டால் நீங்கள் இட்லி தோசைக்கும்தொட்டு சாப்பிட்டுக்கொள்ளலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 2 கைப்பிடி வெந்தயக் கீரை
  • 3 உருளைக்கிழங்கு
  • 3 தக்காளி
  • 5 முந்திரி பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1 பிரியாணி இலை
  • 2 பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • உப்பு
  • 1/2 ஸ்பூன் சர்க்கரை
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  • கொத்தமல்லி தழை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. இதற்கு முதலில் வெந்தயக் கீரையை சுத்தம் செய்து கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.இரண்டு பெரிய கைப்பிடி அளவு வெந்தயக்கீரை நமக்கு தேவைப்படும். அடுத்து மீடியம் சைஸில்இருக்கும் 3 உருளைக்கிழங்குகளை தோல் சீவி மீடியம் சைஸில் கியூப் வடிவத்தில் வெட்டிஇதையும் தண்ணீரில் போட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தக்காளிபழம் 3, முந்திரி பருப்பு 15, போட்டு தண்ணீர் ஊற்றாமல் இதை நைசாக விழுது போல அரைத்துஇதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. அடுத்தபடியாக குக்கரை அடுப்பில் வைத்து அதில்2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் –1/2 ஸ்பூன், பிரியாணி இலை – 1, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 கைப்பிடியளவு சேர்த்து,வெங்காயத்தை நன்றாக வதக்க வேண்டும்.
  4. அடுத்தபடியாக குக்கரை அடுப்பில் வைத்து அதில்2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் –1/2 ஸ்பூன், பிரியாணி இலை – 1, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 கைப்பிடியளவு சேர்த்து,வெங்காயத்தை நன்றாக வதக்க வேண்டும்.
  5. மசாலாவின் பச்சை வாடை அனைத்தும் நீங்கியவுடன்தயாராக வைத்திருக்கும் வெந்தயக்கீரை சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு, உடனடியாக மிக்ஸிஜாரில் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை ஊற்றி, உப்பு தேவையான அளவு, சர்க்கரை– 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு ஒருமுறை நன்றாக கலந்து விடுங்கள்.
  6. கிரேவிக்கு தேவையான அளவு இந்த இடத்தில் தண்ணீரும்ஊற்ற வேண்டும். அதன் பின்பு வெட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, கரம் மசாலா –1/2 ஸ்பூன் போட்டு கலந்து குக்கரை மூடி மீடியம் ஃப்ளேமில் ஒரே ஒரு விசிலை வைத்தால்போதும் ஆளை தூக்கும் வாசத்தில் அசத்தலான கிரேவி ரெடி.
  7. இறுதியாக கொத்தமல்லி தழைகளை தூவி சாப்பிட்டுபாருங்கள். இதன் ருசிக்கு நிச்சயம் வீட்டில் இருப்பவர்களின் நாக்கு அடிமைதான். பிறகுவெந்தயக் கீரையை வாங்கினால் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள்.