சைவ மட்டன் என்ன சொல்லப்படும் பலாக்காய் மசாலா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!

Summary: பலாக்காய்மசாலா எப்படி செய்வது பார்க்கலாம். இதுவரைக்கும் பலாக்காய் பிஞ்சில எந்த ஒரு உணவும் செய்யாதவங்க இப்போ புதுசா ட்ரை பண்ணி பாருங்க. இது ரொம்பவே சுவையா அப்படியே மட்டன் சுவையில் கிடைக்கும். இது சைவ உணவுகள் சாப்பிடறவங்களா இருந்தீங்கன்னா நீங்க இந்த பலாக்காய சமைத்து சாப்பிடும்போது உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இப்ப கடைகளில் நிறையவே கிடைக்கிறது இந்த பலாக்காய் பிஞ்சு.அப்படி சுவையான ருசி இந்த மட்டன் சுவையில் பலாக்காய் மசாலா எப்படி செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Ingredients:

  • 1 பலாக்காய் பிஞ்சு
  • 2 வெங்காயம்
  • 6 காய்ந்த மிளகாய்
  • 2 தக்காளி
  • 1 கப் தேங்காய்பூ
  • 1/2 ஸ்பூன் கசகசா
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • மஞ்சள்தூள்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பலாக்காய் முதலில் தோலை நீக்கி விட்டு டைமண்ட் சைசில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பலாக்காய் நறுக்கும் பொழுது கைகளிலும் கத்தியிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும். அப்பொழுதுதான் கையில் பிசுபிசுப்பு தன்மை இருக்காது.
  2. பிறகு அடுப்பில் குக்கரை வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள பலா காய்களை அலசி சேர்த்து உப்பு மஞ்சள் தூள் பலாக்காய் வேகுவதற்கு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வைத்து எடுக்கவும்.
  3. பிறகுஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் , கசகசாவை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து  சூடானதும்அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  4. பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு  வதக்கிஎடுத்துக் கொள்ளவும் .தக்காளி வெங்காயம் நன்றாக குழைந்து வெந்த பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  5. பிறகு வேகவைத்து எடுத்து வைத்துள்ள பலா காய் பிஞ்சுகளை அந்த கலவையில் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கெட்டியானதும் இறக்கிப் பரிமாறினால் சுவையான சைவ மட்டன் பலாக்காய் பிஞ்சு மசாலா தயார்.