மீதமான சாதத்தில் பூ போன்ற மென்மையான இட்லி செய்வது எப்படி ?

Summary: இந்த இட்லி செய்வதற்கு நீங்கள் வடித்த சாதத்தையும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது தண்ணீர் ஊற்றிய சாதத்தை உபயோகப்படுத்த போகிறீர்கள் என்றால் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி விட்டு உபயோகப்படுத்தலாம். நீங்கள் இது போன்ற இட்லி சுடும்போது இட்லி பூ போன்ற மென்மையாக இருக்கும். இதன் சுவையும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த மீந்து போன சாதத்தில் செய்த இட்லி இருக்கும்.

Ingredients:

  • 1 கப் ரவா
  • 1 ½ கப் சாதம்
  • 1 tbsp உப்பு
  • 2 கப் தண்ணீர்
  • 1 tbsp ENO

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் ஒரு கடாய அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் ரவையை சேர்த்து தீய மிதமாக எரிய விட்டு நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரவை வறுபட்டு மணம் வரத் தொடங்கியதும் கடாயை இறக்கி குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஒன்றரை கப் சாதத்தை சேர்த்து அதனுடன் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் நம் வறுத்த ரவை, ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு கப் அதிகம் புளிக்காத தயிர் மீண்டும் ஒரு கப் அளவிலான தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் அரைத்த மாவை ஒரு பெரிய பவுலில் சேர்த்து அதனை மூடி வைத்து ஒரு பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் பத்து நிமிடம் கழித்து மாவை ஒரு நிமிடம் கரண்டியால் நன்கு கலக்கிக் கொண்டே இருக்கவும்.
  4. பின் ஒரு டீஸ்பூன் அளவு ENO சேர்த்து நன்றாக நன்றாக கலக்கி கொள்ளவும். இப்பொழுது எப்பொழுதும் போல் இட்லி மாவு பதத்திற்கு மாவு தயாராகி இருக்கும். பின் வழக்கம் போல் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
  5. பின் தண்ணீர் சூடேறியதும் இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி இட்லியை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் மீந்து போன சாதத்தில் செய்த பூ போன்ற மென்மையான இட்லி தயாராகிவிட்டது.