ருசியான பஞ்சாபி வெண்டைக்காய் மசாலா இப்படி செய்து பாருங்க! சுட சுட சாதத்துடன் சாப்பிட பக்காவான ரெசிபி!

Summary: வெண்டைக்காய் என்றாலே வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ஐய்யய வழவழ கொழகொழன்னு என்று மூஞ்சியை தூக்குவார்கள். ஆனால் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் ஏராளம். வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். வெண்டைக்காயின் நன்மைகளின் சில தான். இன்னும் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஒரே மாதிரியான வெண்டைக்காய் பொரியல், சாம்பார் என்ற உணவை சாப்பிட்டு அலுத்துக் விடுகிறோம். நம் வாழ்வில் எப்படி மசாலா தேவைப்படுகிறதோ, அதே போல சுவையிலும் மசாலா தேவை. நீங்கள் அனைவரும் வெண்டைக்காய் வறுவல் சாப்பிட்டிருப்பீர்கள். இந்த பஞ்சாபி வெண்டைக்காய் மசாலா ஒருமுறை செய்து பாருங்கள்.

Ingredients:

  • 1/4 கி வெண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் அம்சூர் பவுடர்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் வெண்டைக்காயை கழுவி ஒரு துணியில் துடைத்து விட்டு நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெண்டைக்காயை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கியதும் அதை ஒரு பவுளுக்கு மாற்றி கொள்ளவும்.
  3. அதன்பிறகு அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  5. பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், அம்சூர் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. தக்காளி வதங்கியதும் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து உப்பு, கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
  7. அவ்வளவுதான் சுவையான பஞ்சாபி ஸ்டைல் வெண்டைக்காய் மசாலா தயார்.