கேரளா ஸ்பெஷல் இஞ்சி புளி சிக்கன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! இவ்வளவு டேஸ்ட்டான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

Summary: இஞ்சி புளி சிக்கன் குழந்தைகளுக்கு பெரியவர்கள் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். காரணம் இதில இருக்கிற புளிப்பு சுவை சிலருக்கு காரமான சிக்கன் பிடிக்கும் ஆனால் இது புளிப்பு இனிப்பு காரம் அப்படினு எல்லாமே கலந்த மாதிரியான ஒரு டேஸ்ட் இருக்கப் போகிறது. அதனால சிக்கன் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும் நிறைய விரும்பி சாப்பிடுவாங்க. சில உணவுகளை பார்த்தாலே நாக்குல நீர் வடியும் இல்லையா அந்த மாதிரி இந்த இஞ்சி புளி சிக்கன் சாப்பிடனும்னு நினைக்கும் போதே நாக்கில் எச்சில் வரும். சரி வாங்க எப்படி இந்த இஞ்சி புளி சிக்கன் செய்யறது அப்படினு தெரிஞ்சிக்கலாம்.

Ingredients:

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 எலுமிச்சை பழம்
  • கொத்தமல்லி
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • 50 கிராம் இஞ்சி
  • புளி
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் வெந்தயம்
  • 1/2 ஸ்பூன் வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 3 காய்ந்தமிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் வெல்லம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்து  வைத்துகொள்ள வேண்டும். பின் சிக்கனில் மிளகாய்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.அதில் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து சேர்த்து சிறிது கறிவேப்பிலையோடு நன்றாக பிசறி கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  3. அடுப்பில் ஒரு வானிலையை வைத்து சிக்கன்களை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து ஊற வைத்து எடுத்துள்ளசிக்கன் துண்டுகளை சேர்த்து இருபுறமும் திருப்பிப் போட்டு நன்றாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  4. அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். வதக்கி எடுத்துள்ள இஞ்சி துண்டுகளை ஆற  வைத்துஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
  5. பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் பச்சைமிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள்,காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும் .
  6. இந்த கலவையில்  கெட்டியாககரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.புளி நன்றாக கொதித்து வந்த பிறகு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சியை சேர்த்து நன்றாக கலக்கவும்.