ஹைதராபாத் நிஜாமி ஸ்டைல்  மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க! மீன் வறுவல் வேற லெவல் டேஸ்டா இருக்கும்!

Summary: மீன் வறுவல்களை விதவிதமா அவங்களுக்கு செய்து கொடுக்கும்போது மனசு சந்தோஷப்படும். மீன்ல இருக்கிற நல்லசத்துக்கள் அதிகமாகவே கிடைக்கும். கடல் உணவுகள் என்று நம்ப சொல்லும் போது நம்ம முதலிடம்கொடுக்கிறது மீனுக்கு தான். ஆகையால் அப்படி மீன் நமக்கு அதிக அளவு நல்ல கொழுப்பு உள்ளமீன்களாக இருக்கு. அதனால இதயத்துக்கும் நல்லது பண்ணுது. அது உடலுக்கு எந்த கேடும் மீன்களாலஏற்படறது கிடையாது. அதனால மீன்களை அதிக அளவு உணவில் சேர்த்துகிறதாஷ எந்த ஒரு பாதிப்பும்கிடையாது. சரி வாங்க இந்த ஹைதராபாத் ஸ்டைல் நிஜாமி மீன் வறுவல் எப்படி செய்வது என்றுதெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 1/2 கிலோ மீன்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 3 பச்சைமிளகாய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கைப்பிடி புதினா
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் மைதா மாவு
  • 1 ஸ்பூன் சோளமாவு
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் மீனைசுத்தமாக கழுவி வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகுஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்பு அதில் கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து அரைத்து அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துஎடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள மீனில் அரைத்து வைத்துள்ள மசாலாக்களை சேர்த்து கலந்து விடவும்.அதில்மைதா மாவு , சோள மாவு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மசாலா தடவிவைத்துள்ள மீன்களை ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும்.
  4. பிறகு அடுப்பில் ஒரு தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி மசாலா தடவி ஊறிய மீன்களை எடுத்து வைத்து வறுக்கவும்.ஒருபுறம் வெந்த பிறகு மறுபுறம் திருப்பி போட்டு மசாலாக்கள் நன்றாக மீனுடன் சேர்ந்துவெந்த பிறகு எடுத்து பரிமாறினால் சுவையான ஹைதராபாத் நிஜாமி மீன் வறுவல் தயார்.