நாவில் எச்சி ஊறும் ராகி பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் ராகி பிடி கொழுக்கட்டை தான் செய்து பார்க்கப் போறோம் இது ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு இந்த ராகி கொழுக்கட்டை நாம் உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்து அதே சமயத்தில் நம் நாவிற்கு நல்ல சுவையையும் தரும் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த ராகி பிடி கொழுக்கட்டை இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 கப் சிவப்பு அரிசி அவல்
  • 2 சில் தேங்காய்
  • 3 ஏலக்காய்
  • 1 கப் துருவிய வெல்லம்
  • 1 கப் ராகி மாவு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொண்டு ஒரு கப் சிவப்பு அரிசி அவல், மூன்று ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய இரண்டு சில் தேங்காய் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் அரைத்த தேங்காயை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் ஒரு கப் துருவிய வெல்லம் சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு கப் அளவிற்கு ராகி மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  3. பின் இதனுடன் சிறிது சிறுதாக தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை பிடிக்கும் பதத்திற்கு மாவை சாப்ட்டாக பிசைந்து கொள்ளுங்கள். பின் பிசைந்த மாவை மூடி வைத்து ஒரு பத்து நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பின் இட்லி தட்டில் இட்லி துணியை விரித்து அதன் மேல் ஒரு கை பிடி ராகி மாவை எடுத்து கொழுக்கட்டை பிடித்து இட்லி தட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  5. பின் இட்லி பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டை ஊள் வைத்து பதினைந்து நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான ராகி பிடி கொழுக்கட்டை தயாராகிவிட்டது.