இட்லி, தோசைக்கு சூப்பரான சேலம் எம்டி சால்னா இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க!

Summary: ரோட்டு கடைகளில், பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள கொடுக்கும் சால்னாவில் இருக்கும் சுவை, என்னதான் வீட்டில் முயற்சி செய்தாலும் வராது. அதே சுவையில், அந்த சால்னா குருமாவை நம் வீட்டில் வைத்தால், எப்படி இருக்கும்? நமக்கும் அந்த ரகசிய டிப்ஸ் தெரிந்தால், நம் வீட்டிலேம் செய்து அசத்தலாம் அல்லவா? அந்த வகையில் இந்த பதிவில் சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா செய்வது குறித்து பார்க்கலாம். சால்னா பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, முட்டை பணியாரம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். கடைகளில் விதவிதமான சால்னா வகைகள் கிடைக்கும், கெட்டி சால்னா, எம்டி சால்னா, வெஜ் சால்னா, சிக்கன் சால்னா, இவற்றைப் போலவே ரோட்டோர கடைகளில் கிடைக்கும் எம்டி சால்னாவின் சுவை அலாதியாக இருக்கும், இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம்.

Ingredients:

  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 வர ‌மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கப் புதினா, கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 6 முந்திரி
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • எண்ணெய்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் வெங்காயம், தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, முந்திரி, பொட்டுக்கடலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. அதன்பிறகு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. சிறிது நேரம் கழித்து வெங்காயம், தக்காளி சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
  6. தக்காளி வதங்கிய பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
  7. பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் மூடி போட்டு மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்கவும்.
  8. சால்னா கொதித்ததும் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  9. அவ்வளவுதான் சுவையான சேலம் எம்டி சால்னா தயார்.