கேரளா ஸ்டைல் அவியல் கூட்டு இப்படி செஞ்சி பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!

Summary: அவியல் கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற உணவு வகை. கேரளா மட்டுமின்றி அது தென்னிந்தியா முழுவதும் செய்யப்படும் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு. தென்னிந்திய உணவுகளில் கேரளா உணவுகள் தனித்துவமான சுவை கொண்டவையாக உள்ளன. இந்த உணவுகளில் அவியில் மிகவும் புகழ் பெற்ற சைடிஷ்ஷாக உள்ளது. இந்த கேரளா ஸ்டைல் அவியல் தயார் செய்வதில் சிலர் சிரம படுகின்றனர். வீட்டில் இருந்தே சுவையான கேரளா ஸ்டைலில் அவியல் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். சிலருக்கு இந்த ரெசிபி செய்ய தெரியாமல் கூட இருக்கலாம். அந்த கவலையை போக்க இந்த பதிவு உங்களுக்கு உதவும். அவியல் என்பது பல காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவை நிறைந்த உணவாகும். இதில் சேர்க்கப்படும் பச்சை மிளகாய், தேங்காய், தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் அவியலுக்கு தனித்துவமான சுவையையும், மணத்தையும் கொடுக்கின்றன.

Ingredients:

  • 1 கேரட்
  • 1 துண்டு மாங்காய்
  • 1/4 கப் பரங்கிக்காய்
  • 100 கி பீன்ஸ்
  • 1 உருளைக்கிழங்கு
  • 100 கி சேனைக்கிழங்கு
  • 1 வாழைக்காய்
  • 1 முருங்கைக்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • தேங்காய் எண்ணெய்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 கப் தயிர்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் எல்லா காய்கறிகளையும் நன்கு கழுவி நீள வாக்கில் ஒரே அளவில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சேனை, கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கை காய், போன்ற காய்கறிகள் வேக கொஞ்சம் நேரம் எடுக்கும் என்பதால் முதலில் சேர்த்து வேக விடவும்.
  3. ஐந்து நிமிடங்கள் வேக விட்டு, மற்ற எல்லா காய்களையும் சேர்த்து வேக வைக்கவும்.
  4. காய்கறிகள் சற்று வெந்ததும் உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து மேலும் மூன்று நிமிடங்கள் வேக வைக்கவும்.
  5. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து வேகும் காய்கறிகளில் சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும்.
  6. கடைசியாக கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  7. அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்டைலில் அவியல் தயார்.