பார்தாலே நாவில் எச்சி ஊறும் இறால் காலிஃபிளவர் கறி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

Summary: இறால் காலிஃப்ளவர் கறி சுவையானது, முதல் வாய் சுவைக்கும் பொழுதுஒவ்வொரு துண்டுகளும் நேர்த்தியான சுவையுடன் இருக்கும். தவிர, நறுமணமுள்ள மசாலா கலவை,சரியான பக்குவதின் இந்த செய்முறையில் செய்தல் அருமையான சுவையை தரும். இறால் மற்றும் காலிஃபிளவர் கறிசுவையானது மட்டுமல்ல , ஆரோக்கியமானதும் கூட. நீங்கள் மசாலா பிரியர்களாக இருந்தாலும்சரி அல்லது அசைவ பிரியராக இருந்தாலும் சரி, இந்த ரெசிபி நிச்சயம் ஈர்க்கும். இது நம்பமுடியாதசுவையானது மட்டுமல்ல, இது தயாரிப்பதற்கு மிகவும் சுலபம். சுவை உணர்வுகளைத் தூண்டும்மற்றும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் மேலும் கேட்க வைக்கும்.வாங்க இதை எப்படி செய்வதுஎன்று பார்ப்போம்

Ingredients:

  • 1/4 கிலோ இறால்
  • காலிஃப்ளவர்
  • 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 2 தக்காளி
  • 3 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • 4 டீஸ்பூன் எண்ணெய்
  • சிறிய துண்டு பட்டை
  • 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது வினிகர்
  • 3 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் இறாலை சுத்தம் செய்து அதன் வயிற்றில் உள்ள அழுக்கு மற்றும் முதுகில் உள்ள அழுக்கை கத்தியால் கீறி எடுத்து நான்கு ஐந்து முறைகழுவி தனியாக வைக்கவும்
  2. காலிஃப்ளவரை தனித் தனியாக பிரித்தெடுத்து கொதிக்கிறதண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகர் விட்டு கழுவி அதையும் தனியாக வைக்கவும்.
  3. எண்ணெயை காயவைத்து ஒரு சிறிய பட்டை போட்டு,வெங்காயம், இஞ்சி பூண்டு போட்டு வதக்கி பாதி கொத்தமல்லி போட்டு பச்சை மிளகாய் ஒடித்துபோடவும்
  4. தக்காளி அரைத்து ஊற்றவும். பிறகு மிளகாய்தூள்,மஞ்சள் தூள், உப்பு போட்டு நல்ல கிளறி விடவும். இறால் சீக்கிரம் வெந்து விடும், காலிஃப்ளவரும்வெந்நீரில் போட்டு எடுத்ததால்
  5. அதுவும் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் இந்தஇரண்டையும் கடைசியில் போட்டு நன்கு கிளறி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் வேக விட்டுகொத்தமல்லி தூவி இறக்கவும். ..