மழைக்கு இதமா சூடாக சாப்பிட காரைக்குடி கருப்பட்டி குழிப்பணியாரம் இப்படி செய்து பாருங்க!

Summary: பலகாரங்களுக்கு பெயர் பெற்றது செட்டிநாடு பகுதி. செட்டிநாட்டு பகுதிகளில் விதவிதமான பலவேறு பலகாரங்களை அங்குள்ள மக்கள் செய்து பண்டிகைகள் விழாக்கள் போன்ற நாட்களை சிறப்பித்து வருகிறார்கள். பாரம்பரியம் நிறைந்த பல்வேறு வகையான பலகாரங்கள் இந்த பகுதிகளில் செய்வது வழக்கம். அப்படி செட்டிநாட்டு பகுதியில் சிறப்பு வாய்ந்த ஒரு பலகாரம் தான் கருப்பட்டி பணியாரம். கருப்பட்டியில் சுவைக்கு ஏற்ப மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது. இது கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மிதமான இனிப்பில் ஆரோக்கியமானது கருப்பட்டி பணியாரம்.

Ingredients:

  • 1/2 கி பச்சரிசி
  • 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • 50 கி உளுந்து
  • 1/2 கி கருப்பட்டி
  • 4 ஏலக்காய்
  • 1/4 கி புழுங்கல் அரிசி
  • நல்லெண்ணெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 குழிபணியார கல்

Steps:

  1. முதலில் பச்சரிசி, வெந்தயம் மற்றும் உளுந்தை நன்கு அலசி 2 மணி நேரம் வரை ஊற வைத்துக்கொள்ளவும்.
  2. ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்தை மிக்ஸி போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. பிறகு மாவு புளிக்கும் வரை, அதாவது 7 முதல் 8 மணி வரை அப்படியே வைத்து விடுங்கள்.
  4. ஒரு கடாயை அடுப்பில் வைத்து கருப்பட்டியை சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
  5. காய்ச்சிய பாகை பணியார மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு இதனுடன் ஏலக்காயை பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. பிறகு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி மாவை ஊற்றவும்.
  7. அவ்வளவுதான் இப்பொழுது மிகவும் சுவையான பொன்னிறமான காரைக்குடி கருப்பட்டி குழிபணியாரம் தயார்.