ருசியான மேகி உருளைகிழங்கு பால்ஸ் இப்படி செய்து பாருங்க! சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசபி மிஸ் பண்ணாதீங்க!

Summary: மேகியவச்சு நம்ம இப்போ ஒரு சுவையான உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் பண்ண போறோம். இந்த உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் ரொம்பவே நல்லா இருக்கும்.இது மாலை நேர சிற்றுண்டியா குழந்தைகளுக்கு கொடுத்தால் ரொம்பவே பிடிக்கும். இந்த உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. இது ரொம்ப சுலபமான ஒரு மாலை நேர சிற்றுண்டி ரொம்பவே சீக்கிரமா இத நம்ம செய்துகொடுத்து விடலாம். எல்லாருக்குமே ரொம்ப சுலபமான உருளைக்கிழங்கு மேகி பால் எப்படி செய்வது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Ingredients:

  • 4 உருளைக்கிழங்கு
  • 1 பாக்கெட் மேகி
  • 1 வெங்காயம்
  • 12 கப் கேரட்
  • 12 கப் பீன்ஸ்
  • 1 கப் பிரட் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் உருளைக்கிழங்கை கழுவி விட்டு வேகவைத்து தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு தோலுரித்த உருளைக்கிழங்குகளை மத்தால் மசித்து கொள்ளவும். மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுக்கக் கூடாது. மசித்த உருளைக்கிழங்குகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் கேரட் , பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  4. பிறகு அதில் காய்கறிகள் வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்து வரும் பொழுது மேகி பாக்கெட்டில் உள்ள மேகி மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும். காய்கறிகள் வெந்த பிறகு அதில் மேகியை சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு வேக வைக்கவும்.