காரசாரமான பூண்டு கருவேப்பிலை புளி குழம்பு செய்து எப்படி ?

Summary: எனக்கு சிக்கன் பிடிக்கும் மட்டன் பிடிக்கும் என அசைவ உணவுகளை அடித்து மாட்டும் பல பேருக்கு அதே சமயத்தில் புளி குழம்பு போன்ற சைவ குழம்புகளையும் அடித்த மாட்டி விடுவார்கள் அந்த அளவிற்கு புளிக் குழம்புக்கு என் தனி பிரியர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கிற பூண்டு கருவேப்பிலை குழம்பு பிடிக்காது என்று சொல்லும் நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் தாறுமாறாக இருக்கும். இதே போல் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பூண்டு கருவேப்பிலை குழம்பு செய்து கொடுத்தால் அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 tbsp எண்ணெய்
  • 7 பல் பூண்டு
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • தண்ணீர்
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • ¼ tbsp உளுந்த பருப்பு
  • 1 tbsp சீரகம்
  • ¼ tbsp வெந்தயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 15 சின்ன வெங்காயம்
  • 1 tbsp கருவேப்பிலை பொடி
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 ½ tbsp மல்லி தூள்
  • வதக்கி அரைத்த மசாலா
  • 1 கப் புளி கரைசல்
  • 1 கப் தண்ணீர்
  • உப்பு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு கப் அளவில் ஆன கருவேப்பிலை இலைகளை சேர்த்து எண்ணெயில்லாமல் வறுத்துக் கொள்ளவும், கருவேப்பிலை இலைகள் ஈரப்பதம் இல்லாமல் நன்கு வறுப்பட்டதும் மிக்ஸயில் சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் ஏழு பல் பூண்டு, பத்து தோல் உரித்த சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி பின் மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின் கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து கிளறி விட்டு கொள்ளவும்.
  4. பின் இதனுடன் தோலுரித்த 15 சின்ன வெங்காயம், எட்டு பல் பூண்டு மற்றும் அரை டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் அதனுடன் ஒரு டீஸ்பூன் கருவேப்பிலை பொடி, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், 1 1/2 டீஸ்பூன் மல்லி தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  5. பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் நாம் மிக்ஸியில் அரைத்த வெங்காயத்தையும் சேர்த்து ஒரு இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் இதனுடன் ஒரு கப் அளவிற்கு புளிக்கரைசல் மற்றும் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் குழம்பை நன்றாக கொதிக்க விடுங்கள்.
  6. பின் குழம்பு நன்றாக கொதித்து குழம்பும் எண்ணெயும் தனியாக பிரிந்து வரும் சமயத்தில் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான பூண்டு கருவேப்பிலை புளிக்குழம்பு இனிதே தயாராகிவிட்டது.