நீங்கள் வைக்கும் சாம்பாரின் சுவை இன்னும் அதிகரிக்க இப்படி தஞ்சாவூர் பக்குவத்தில் ஒருமுறை சாம்பார் வைத்து பாருங்கள்!!! 

Summary: ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சுவைகளில் அங்கு சமைக்கப்படும் உணவுகள் இருக்கும். இவ்வாறு தான் ஒவ்வொருஊரிலும் ஒவ்வொரு விதமான உணவுகள் அந்த ஊருக்கு என்று பெயர் போனதாக இருக்கும். சாம்பார் என்பது வாரத்திற்குஇரண்டு முறையாவது அனைத்து வீடுகளிலும் செய்யப்படும் ஒரு குழம்பு வகை ஆகும். இதனை இட்லி,தோசைக்கு தொட்டுக் கொள்ளவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் என அனைவரும் விருப்பமாகசாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு கூட காரம் சேர்க்காமல் சாம்பாரை தான் உணவில் சேர்த்துக்கொடுப்பார்கள் அப்படி தஞ்சாவூர் சாம்பார் என்பது அனைவர்க்கும் விருப்பமான ஒன்று. அவ்வாறு தஞ்சாவூர் ஸ்பெஷல்சாம்பார் செய்வது எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • கிராம் துவரம் பருப்பு
  • 25 கிராம் தனியா
  • 25 கிராம் கடலைப் பருப்பு
  • 100 கிராம் வரமிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 2 பெருங்காயம் சிறிய துண்டு
  • 1 கைப்பிடி கருவேப்பிலை
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • புளி
  • 2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 100 கிராம் பரங்கிக்காய்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் உப்பு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 4 ஸ்பூன் எண்ணெய்
  • 1 கொத்து கொத்தமல்லி தழை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒருகடாயை வைத்து வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் 50 கிராம் தனியாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுக்க வேண்டும். பிறகு கடலைப்பருப்பு சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் 50 கிராம் துவரம் பருப்புடன், மிளகு, வெந்தயம்ஒன்றாக சேர்த்து வறுக்க வேண்டும்.
  2. பிறகு இதனுடன் சிறிய துண்டு பெருங்காயம், ஒருகொத்து கறிவேப்பிலை சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் நூறு கிராம் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் சேர்த்து, இதனுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும்வரை வேக வைத்து கடைந்து வைக்க வேண்டும்.
  3. இறுதியாக வரமிளகாய் சேர்த்து வறுத்து, இதனையும்அவற்றுடன் சேர்க்க வேண்டும். பிறகு இவற்றை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு மறுபடியும் கடையை அடுப்பின் மீது வைத்து மூன்று ஸ்பூன் எண்ணெயை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்துதாளிக்க வேண்டும்.
  4. பின்னர் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய் மற்றும் பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
  5. பிறகு இவற்றுடன் நெல்லிக்காய் அளவு புளியைஊறவைத்து, கரைத்து, புளிக் கரைசலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு மஞ்சள்தூள் சேர்த்து கலந்துவிட்டு, இதனுடன் கடைந்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
  6. இப்பொழுது அரைத்து வைத்துள்ள சாம்பார் பொடியை2 ஸ்பூன் அளவு சேர்த்து கலந்துவிட்டு, இறுதியாக கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்துஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.