வாய்க்கு ருசியா முடக்கறுத்தான் கீரை துவையல், இப்படி எளிமையான முறையில் செய்து சாப்பிட்டு பாருங்க!

Summary: முடக்கறுத்தான் கீரை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அவை நல்ல பலனை கொடுகின்றது. முடக்கறுத்தான் கீரை சளி, ஜலதோஷம்,வறட்டு இருமல் போன்றவைகளை குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. சளி, இருமல் உள்ளவர்கள் இந்த முடக்கறுத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது சளி பிரச்சனை சரியாகி விடுகின்றது. இந்த முடக்கத்தான் கீரையில் லேசான கசப்பு சுவையை உடையது ஆகையால் துவையல் அரைத்து உண்ணும் பொழுது லேசான கசப்பு தன்மை இருக்கும்.

Ingredients:

  • 1 கப் முடக்கறுத்தான்
  • 6 காய்ந்த மிளகாய்
  • புளி
  • 10 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/2 கப் தேங்காய்
  • 1 துண்டு இஞ்சி
  • உப்பு
  • நல்லெண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் முடக்கறுத்தான் கீரைகளை நன்றாக சுத்தமாக எடுத்து கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய் வறுத்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பிறகுஅதே எண்ணெயில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. பின்பு தேங்காயை சேர்த்து வதக்கிக் கொள்ளவும் அதிலே புளியையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  4. வதக்கிய பொருட்கள் எல்லாம் தனியாக எடுத்து ஆற வைக்கவும். பிறகு சிறிது எண்ணெய் சேர்த்து முடக்கறுத்தான் கீரைகளை எண்ணெயில் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும். கீரைகள் நன்றாக மொறு மொறுவென்று வறுத்த பிறகு அவைகளை எடுத்து ஆற வைக்கவும்.இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் காய்ந்த மிளகாயை சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ளவும்.
  5. பிறகு வறுத்து வைத்துள்ள கடலைப்பருப்பு , உளுந்து, தேங்காய் இஞ்சி , பூண்டு , முடக்கத்தான் கீரைகளை சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  6. இப்படி அரைத்த எடுத்துள்ள முடக்கறுத்தான் துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அருமையான ருசியில் அபாரமாக முடக்கறுத்தான் கீரை துவையல் தயார்.