இட்லி மீதமானால் உப்புமா செய்யலாம் அந்த உப்புமாவை இப்படி ருசியாகவும் செய்யலாம் ஒரு முறை செஞ்சி பாருங்க!

Summary: சூரியவம்சம்இட்லி உப்புமா மாலை நேர சிற்றுண்டியா எப்போதெல்லாம் இட்லி இல்லங்கல்ல மீதம் இருக்குதோ அப்போதெல்லாம்   அவங்க வீட்டுல இட்லி உப்புமா தான். நாமளும் அந்த சூர்யவம்சம் இட்லி உப்புமா ஸ்டோரி தெரிஞ்சி தான் இருக்கோம். இந்த உப்புமால நம்ம என்னெல்லாம் புதுசா சேர்த்து பண்ண போறோம் அப்படிங்கறதையும் பார்த்துட்டு உங்களுக்கு விருப்பமானது நீங்க அதுல சேர்த்து பண்ணிக்கலாம். . இந்தசூரியவம்சம் இட்லி உப்புமா எப்படி பண்ண போறோம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Ingredients:

  • 5 இட்லி
  • 1 வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • 1 கப் கேரட்
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 3 ஸ்பூன் இட்லி பொடி
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் இட்லிகளை  சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. அதே பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும் .
  3. வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  4. பிறகு அதில் கேரட், வேக வைத்து எடுத்து உள்ள பச்சைப்பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை பட்டாணி, கேரட் நன்றாக வதங்கிய பிறகு அதில் வறுத்து வைத்துள்ள இட்லிகளை சேர்த்து கலந்து விடவும்.
  5. இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும் பிறகு அதில் இட்லி பொடியை சேர்த்து நன்றாக  கலந்துஇறக்கி சூடாக பரிமாறினால் சூரிய வம்சம் இட்லி உப்புமா ரிட்டன்ஸ் தயார்.