Summary: கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிட்லேயே வாழைப்பழ கேக் செய்து அசத்துங்கள். நம் அனைவருக்குமே வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்கும், தொடர்ச்சியாக மதிய உணவிற்கு பிறகு வாழைப்பழத்தினை சாப்பிடுவதனால் வயிற்று பகுதிகளில் உள்ள குடற்புழுக்களை நீக்கி வயிற்று பகுதி சுத்தப்படுத்தபடும். இந்த பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் கண்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது.