சூப்பரான சுரைக்காய் தோசை கமகமனு எப்படி வீட்ல எப்படி செய்வது? முழு ரெசிபி இதோ?

Summary: குழந்தைகள் எந்த காய்கறிகளை சாப்பிட அடம் பிடிக்கிறார்களோ அந்த காய்கறிகள் எல்லாம் இந்த மாதிரி தோசை இல்ல சாதத்தோட கலந்து அவங்களுக்கே தெரியாம அவர்களுக்கே கொடுக்கணும்.  தோசைதான் சுலபமாக எல்லாரும் சாப்பிட கூடிய டிபன் வகைகளில் வரும். சுரைக்காய் தோசை இந்த சுரைக்காய் தோசை ரொம்பவே ருசியான தோசை கூட சத்தும் அதிகமா இருக்கு.

Ingredients:

  • 4 கப் இட்லி அரிசி
  • 1/2 கப் உளுந்து
  • 2 கப் சுரைக்காய்
  • 4 ஸ்பூன் வெந்தயம்
  • 1 கப் தேங்காய்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் இட்லி அரிசியை நன்றாக கழுவி விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல்உளுந்தையும் ஊற வைக்கவும். வெந்தயத்தையும்ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பிறகு சுரைக்காயில் மேல் தோலை நீக்கிவிட்டு அதேபோல் உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசி, உளுந்து ,வெந்தயம் ஊறிய பிறகு கிரைண்டரை சுத்தமாக கழுவி எடுத்துக்கொண்டு வேண்டும்.
  3. அதில் முதலில் வெந்தயத்தை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். பிறகு அதில் கழுவி வைத்துள்ள உளுந்தை சேர்த்து நன்றாக மாவு மேலே எழும்பி வரும் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக அரைத்த பிறகு வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  4. பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள சுரைக்காய் சேர்த்து அரைக்கவும். சுரைக்காய்  முக்கால்பதம் அரைந்த பிறகு அதில் கழுவி வைத்துள்ள இட்லி அரிசியை சேர்த்து நன்றாக அரைத்து வழித்து எடுத்துக் கொள்ளவும்.
  5. உளுந்து மாவில் இந்த அரிசி மாவை கலந்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து புளிக்க விட்டு விட வேண்டும். மாவு இரவு முழுவதும் புளித்த பிறகு காலையில் அந்த சுரைக்காய் மாவில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடாகியதும் நன்றாக மாவை கலக்கி விட்டு தோசைகளாய் வார்த்து மேலே எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுத்தால் சுவையான சுரைக்காய் தோசை தயார்.