காரசாரமான வெந்தய கார குழம்பு செய்வது எப்படி ?

Summary: சைவ குழம்பு, கிரேவி, பொரியல் மற்றும் அவியல் என சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம் உள்ளனர். அதிலும் இன்று நாம் அதிக நபர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு கார குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் வெந்தயக் கார குழம்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது ஆகையால் வெந்தைய காரக்குழம்பு செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மதிய சுடு சோறுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு கார குழம்பாக இருக்கும்.

Ingredients:

  • 1 tbsp சீரகம்
  • ¾ tbsp வெந்தயம்
  • 1 tbsp அரிசி
  • 1 tbsp மிளகு
  • 4 tbsp நல்லெண்ணெய்
  • ¾ tbsp கடுகு உளுந்த பருப்பு
  • ½ tbsp வெந்தயம்
  • 15 சின்ன வெங்காயம்
  • 7 பல் பூண்டு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 3 தக்காளி
  • ¼ tbsp மஞ்சள் துாள்
  • 1 மிளகாய் தூள்
  • 2 tbsp வறுத்து பொடி செய்த மசாலா
  • 2 டம்பளர் புளி கரைசல்
  • ½ டம்பளர் தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அந்த கடாயில் ஒரு டீஸ்பூன் சீரகம், முக்கால் டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் அரிசி மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகு போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்து பின் மிக்ஸியில் சேர்த்து பொடியா அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் நான்கு டீஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும், முக்கால் டீஸ்பூன் அளவு கடுகு உளுந்தம் பருப்பு மற்றும் அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து கொள்ளவும்.
  3. பின் கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் நாம் தோல் உரித்து வைத்திருக்கும் 15 சின்ன வெங்காயம் மற்றும் எட்டு பல் பூண்டு சேர்த்து வதக்கவும். பின் பூண்டு நன்கு வதங்கியதும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. அதன் பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் மூன்று தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டு டீஸ்பூன் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  5. பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கி வந்ததும் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து இரண்டு டம்ளர் அளவு புளி கரைசல் மற்றும் அரை டம்ளர் ஆளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பின் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பு நன்றாக கொதிக்க வையுங்கள்.
  6. பின்பு குழம்பு நன்றாக கொதித்து குழம்பும் எண்ணெயும் தனியாக பிரிந்து வரும் நேரத்தில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான வெந்தய கார குழம்பு இனிதே தயாராகிவிட்டது.