இது கொஞ்சம் புதுசு! கடலைப்பருப்பே இல்லாமல் சோளம் வடை. அதுவும் உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியம் சோளம் சேர்த்த வடை இது!

Summary: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிஸ்னாக்ஸ் டிபன் என்றால் அது வடைதான். அந்த வடையில் நார்ச்சத்து நிறைந்த இந்த சோளத்தைகலந்து சுட்டு கொடுங்கள். உடலுக்கு தேவையான நார்ச்சத்து முழுவதும் இந்த வடையில் இருந்தேகிடைத்துவிடும். ஸ்வீட் கான்  உங்களுக்கு எதுகிடைத்தால் அதை பயன்படுத்தி இந்த வடை செய்வது என்ற செய்முறையை தெரிந்துகொள்வோமா

Ingredients:

  • 2 வரமிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 5 தோலுரித்த பூண்டு
  • 1 இன்ச் இஞ்சி
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 2 பெரிய கைப்பிடி ஸ்வீட் கான்
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 2 கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. எல்லா பொருட்களையும் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து தனியாக ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
  2. இந்த விழுதோடு அரிசி மாவு – 2 இரண்டு டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 கைப்பிடி அளவு, பொடியாக, உப்பு தேவையான அளவு, போட்டு உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  3. இதை மசால் வடை  போலவே உருட்டி தட்டி நன்றாக காய்ந்திருக்கும் எண்ணெயில் போட்டு அப்படியே சுட சுட வடையை சுட்டு சாப்பிட்டு பாருங்கள். அத்தனை அருமையாக இருக்கும்.
  4. இது கூட ஏதாவது ஒரு சட்னி தொட்டுக்கோங்க. இதனுடைய சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். உடலுக்கு இந்த வடை ஆரோக்கியம் தானே. ஸ்வீட் கான் சேர்த்து இருக்கின்றோம்.  வேற என்ன வேண்டும்.