மாசிக்கருவாடு பொரியல்,வெறும் ரசம் சாதமாக இருந்தாலும் சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியா அருமையாகவும் இருக்கும்!

Summary: கருவாடு கடைகளில் கிடைக்கும் அநீ வாங்கி வந்துட்டு எப்ப எல்லாம் நம்ம சாதத்துக்கு எதுவும் சைடு டிஷ் இல்ல அப்படின்னு ஃபீல் பண்றமோ அந்த மாதிரி நேரத்தில் இந்த மாசி சம்பல் ரொம்பவே சுலபமா செய்து சாப்பிட்டு கொள்ளலாம். நமக்கு நல்ல ஒரு சைடிஷ் இல்ல வெறும் சாதம் மட்டும்  இருக்குஅப்படிங்கற பீலிங் எல்லாமே வரவே வராது இந்த சம்பலோட   சாப்பிடும்போது அது வெறும் தயிர் சாதமாக இருந்தாலும் சரி ரசம் சாதமாக இருந்தாலும் சரி அந்த சாப்பாடு அவ்வளவு ருசியா அருமையாகவும் இருக்கும்.

Ingredients:

  • 14 கப் மாசி தூள்
  • 5 மிளகாய் வற்றல்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 கப் தேங்காய்த் துருவல்
  • உப்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில்ஒரு மிக்ஸி ஜாரில் மாசித் தூளுடன், மிளகாய் வற்றல் மற்றும் தேவையான உப்புக் கலந்து, மிக்ஸியில்  பொடிசெய்து கொள்ளவும். மாசிக் கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால் சிறிதளவு உப்பு சேர்த்தால் போதும்.
  2. அரைத்த பொடியுடன், தேங்காய் பூ சேர்த்து சிலவினாடிகள் அரைத்துவிட்டு, அத்துடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கொரகொரப்பாக அரைத்தால் போதும்.
  3. சிறிது கூடத் தண்ணீர் சேர்க்கக்கூடாது. வெங்காயம் சேர்த்து அரைத்தபின் துவையல் பதத்தில் இருக்கும். அதை வேறு பாத்திரத்தில் மாற்றி விட வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு,  அதில்கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
  4. கடுகு வெடித்த பின், அதில் அரைத்து வைத்த மாசிக்கலவையைச் சேர்க்கவும் மிதமான தீயில் வைத்து, துவையல் பதத்தில் இருக்கும் மாசிக் கலவை உதிரியாக ஆகும் வரை பொரிக்கவும்.
  5. மிகவும் சுவையான இந்த மாசி சம்பல், தயிர் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.