மொறு மொறுன்னு சூப்பரான வாழைக்காய் சிப்ஸ் ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க! இது வேற லெவல் டேஸ்ல இருக்கும்!!!

Summary: பெரும்பாலும் எல்லோரது வீட்டிலும்உருளைக்கிழங்கை வைத்து தானே சிப்ஸ் போடுவாங்க. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக வாழைக்காயைவைத்தும் சூப்பரான சிப்ஸை மொறுமொறுன்னு ருசியாக போடலாம். கொஞ்சம் பொறுமையாக பக்குவமாகபின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி வாழைக்காய் சிப்ஸ் போட்டால் எல்லோருக்கும்ஒரு கிறிஸ்டியான சூப்பர் ஸ்னாக்ஸ் சிப்ஸ் கிடைக்கும். இந்த வாழைக்காய் சிப்ஸ் எல்லாவெரைட்டி ரைஸ்கும் தொட்டுக்கொள்ள சூப்பரா இருக்கும். கெட்டுப் போகாது. நேரத்தைக் கடத்தாமல் அந்தரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 2 வாழைக்காய்
  • 1/2 ஸ்பூன் உப்பு
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. சிப்ஸ் போடுவதற்கு எப்போதுமே கொஞ்சம் முற்றியவாழைக்காய் ஆக வாங்கிக் கொள்ள வேண்டும். 2 வாழைக்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள். வால்பகுதி தலை பகுதியை நீக்கிவிட்டு, வாழைக்காய் மேலே இருக்கும் தோலை சீவி விட்டு, அப்படியேதண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
  2. அப்போதுதான் கருக்காமல் இருக்கும்.தோல் சீவிய வாழைக்காயை பஜ்ஜி சீவலில் வட்ட வடிவத்தில் சீவிக் கொள்ள வேண்டும். மொத்தமாகசிவ கூடாது. மெல்லிசாக சீவி கொள்ளுங்கள். சீவிய எல்லா வாழைக்காயையும் தயாராக எடுத்துவைத்துக் கொள்ளுங்கள்
  3. ஒரு அகலமான பாத்திரத்தில் சுத்தமான நல்ல தண்ணீரைஊற்றி, அதில் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன் போட்டு சீவிய வாழைக்காய்களைஅந்த மஞ்சள் தண்ணீரில் 15 லிருந்து 20 நிமிடம் அப்படியே ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு தண்ணீரில் இருந்து வாழைக்காய்களை பக்குவமாக தண்ணீரை வடித்து எடுத்து, தனியாகவைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெயை நன்றாக சூடுசெய்து விடுங்கள்.
  5. எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு வாழைக்காயாக தனித்தனியாகபிரித்து எண்ணெய் சட்டியில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்துஎடுக்க வேண்டும்.
  6. கொஞ்சமாக உப்பு கலந்த தண்ணீரை தயார் செய்துவைத்துக்கொள்ளுங்கள். வாழைக்காயை எண்ணெய் சட்டியில் போட்டதும், ஒரு ஸ்பூன் அளவு உப்புதண்ணீரை அந்த எண்ணெயில் ஜாக்கிரதையாக ஊற்றி விட்டீர்கள் என்றால், அந்த உப்பு சரியானஅளவில் எல்லா வாழைக்காயிலும் சரியான அளவு பிடிக்கும்.
  7. எண்ணெய் சட்டியில் போட்டவுடன் வாழைக்காயில்சலசலப்பு இருக்கும். அந்த சலசலப்பு முழுமையாக அடங்கியதும், வாழைக்காய் முழுமையாக வெந்துவிட்டது என்று அர்த்தம்.
  8. எண்ணெயை நன்றாக வடித்து விட்டு வாழைக்காயைஎண்ணெய் சட்டியில் இருந்து எடுத்து நன்றாக ஆற வைத்து, தேவைப்பட்டால் இதன் மேலே மிளகாய்தூளை தூவி சாப்பிடலாம். அட்டகாசமான வாழைக்காய் சிப்ஸ் தயார். உங்களுக்கு இந்த குறிப்புபிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.