காரசாரமான ருசியில் பிரெட் சில்லி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!

Summary: பிரெட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரெட்டில் சுவையான ரெசிபிகளை உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அசத்தலாம். சீன உணவுகள் இந்திய சுவையில் செய்து சாப்பிடும்போது அதன் ருசி அலாதியானது. ஃபிரைடு ரைஸ் தொடங்கி சில்லி சிக்கன் வரை எதுவும் நாவூற வைக்கும். அந்த வகையில் பிரெட் துண்டுகளை பயன்படுத்தி பிரெட் சில்லி செய்து பார்க்கலாம். விதவிதமான டிபன் வகைகள் செய்து கொடுத்தாலும், இந்த பிரட் ரெசிபிக்கு ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. இனிப்பும், காரமும் கலந்த இந்த பிரட் சில்லி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் அமைய இருக்கிறது.

Ingredients:

  • 6 பிரெட் துண்டுகள்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 குடைமிளகாய்
  • 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 2 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1/2 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பிரட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயம் மற்றும் குடைமிளகாயை பெரிய பெரிய துண்டுகளாக சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் ‌மற்றும் குடமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. இவை சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டை தட்டி சேர்த்துக் கொள்ளவும். பிறகு காஷ்மீர் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. மசாலா வாசனை போனவுடன் சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, இப்போது நாம் பொரித்து வைத்துள்ள பிரட் துண்டுகளை நன்கு கிளறி இரண்டு நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும்.
  6. சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  7. அவ்வளவுதான் சுவையான பிரெட் சில்லி தயார்.