கமகமனு ருசியான குடைமிளகாய் தோசை இரவு டிபனுக்கு இப்படி செய்து பாருங்கள்! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: நாம் செய்யக்கூடிய சமையல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். நாவிற்கு சுவை கொண்டதாகவும் இருக்க வேண்டும். சமைப்பதற்கு சுலபமாகவும் இருக்க வேண்டும். காலை நேரத்தில் அவசர அவசரமாகச் லஞ்ச் பேக் செய்யும் போதுகுழந்தைகளுக்கு, கணவருக்கு ஹெல்தியான சுவையான ஒரு ரெசிபி சமைக்க வேண்டும் என்று முடிவுசெய்து விட்டால், இந்த குடைமிளகாய் மசாலா  செய்து அசத்துங்கள். தோசை உள்ளே இந்த வைத்து சுருட்டி குடைமிளகாய் மசாலா தோசை செய்து கொடுக்கலாம்.தோசையில் வைத்து சுருட்டி கொடுக்கலாம். சாம்பார் சாதம் ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளசைட் டிஷ் ஆகவும் கொடுக்கலாம். நம்முடைய விருப்பம்தான். சிம்பிளான இன்ட்ரஸ்டிங்கானஹெல்தியான இந்த ரெசிபியை தெரிந்து கொள்வோமா.

Ingredients:

  • 2 குடை மிளகாய்
  • 2 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4 ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு
  • 1 கொத்து கொத்தமல்லித்தழை
  • 1 கப் தோசை மாவு
  • 2 துண்டு சீஸ்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் 2 வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்துகொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் இரண்டுகுடைமிளகாயை காய் துருவல் பயன்படுத்தி பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பைபற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய்நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  2. பிறகு அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி,நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு இவற்றுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாககலந்து விட வேண்டும். இவை ஐந்து நிமிடம் நன்றாக வதங்கிய பின்னர், இவற்றுடன் துருவிவைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து, அடுப்பை அதிக தீயில் வைத்து, 3 நிமிடம் கலந்து விட்டாலேபோதும், குடை மிளகாய் நன்றாக வெந்து விடும்.
  4. பிறகு இறுதியாக ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறுமற்றும் கொத்தமல்லி தழை தூவி கலந்து விட்டு, இந்த மசாலாவை கீழே இறக்க வேண்டும். பிறகுஅடுப்பின் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து, இரண்டு கரண்டி தோசை மாவு ஊற்றி, தோசை சுட வேண்டும்.
  5. பிறகு அரைப் பக்க தோசையின் மீது, செய்து வைத்துள்ளமசாலாவிலிருந்து 2 ஸ்பூன் மசாலாவை எடுத்து பரப்பிவிட்டு, அதன் மீது சிறிதளவு சீஸை துருவிவிட வேண்டும்.
  6. பின்னர் தோசையை இரண்டாக மடித்து இரண்டு பக்கமும்நன்றாக வெந்தவுடன் சுட சுட பரிமாறி கொடுத்து பாருங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.