ருசியான மீல் மேக்கர் குருமா ஒரு முறை மட்டும் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பின் அடிக்கடி நீங்களே விரும்பி செய்வீங்க!

Summary: இந்நாள் குழந்தைகளிடம் தங்களுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்டால் நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா, குல்ச்சா என்று ஒரு பெரிய பட்டியலே அடுக்குவார்கள். ஆனால், 80ஸ் கிட்ஸ் & 90ஸ் கிட்ஸிடம் பிடித்தமான உணவு பற்றிக் கேட்டால் முதலில் சொல்வது சப்பாத்தியும் மீல் மேக்கர் குருமாவும் தான். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் நம் பலரது வீடுகளிலும் அம்மாக்கள் ஒரு காரணத்தோடு இந்த மீல் மேக்கர் குருமா, சப்பாத்தி செய்வார்கள். எல்லோருக்கும் மீல் மேக்கர் பிடிக்கும் என்று கூறி விட முடியாது ஆனால் சோயா பீனிலிருந்து உருவாகக்கூடிய இந்த மீல்மேக்கர் வெஜ் பிரியாணி போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு. அது போல இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம்.

Ingredients:

  • 1 கப் மீல் மேக்கர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • 2 பட்டை கிராம்பு ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கப் தேங்காய்
  • 1 டீஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 4 வர ‌மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் மீல் மேக்கரை கழுவி சுடு தண்ணீரில் சிறிது நேரம்ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்கடலை, வரமிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  4. பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் மீல் மேக்கர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விட்டு இறக்கவும்.
  7. அவ்வளவுதான் சுவையான சப்பாத்திக்கு ஏற்ற மீல் மேக்கர் குருமா தயார்.