சுலபமாக ருசியாக வீட்டில் செய்யக்கூடிய சிக்கன் புலாவ் ரெசிபி! மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க!

Summary: சிக்கன் புலாவ் நீங்க செய்தீங்கன்னா செய்தது அப்படியே காலியாகும் அளவிற்கு விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. அவங்களோட விருப்பமும் வயிறு நிறைய சாப்பிடுவதும் நம்ம செய்ற சாப்பாட்டுக்காக பெரிய பெரிய பரிசு நமக்கு. ஆகையினால அவங்க ருசித்து சாப்பிடறதை செய்த சாப்பாட்டுக்கான ஒரு நல்ல பரிசு தான் .  அப்படிநம்ம செய்ல சாப்பாட்டா ருசிச்சு சாப்பிடற மாதிரியான புலாவ் தான் இப்போ பண்ண போற சிக்கன் புலாவ் வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கிலோ பாஸ்மதி அரிசி
  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 கையளவு பூண்டு
  • 3 வெங்காயம்
  • 6 பச்சை மிளகாய்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கப் தயிர்
  • 1/2 கப் புதினா,கொத்தமல்லி
  • 1 கப் தேங்காய் பால்
  • உப்பு
  • எண்ணெய்
  • 2 பட்டை
  • 2 இலவங்கம்
  • 2 ஏலக்காய்
  • 2 மராட்டி மொக்கு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. இந்த சிக்கன் புலாவ் செய்வதற்கு முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொண்டு சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி 20நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  3. பிறகு அடுப்பில் குக்கரை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், மராட்டி மொக்கு  சேர்த்துதாளிக்கவும்.
  4. பிறகு புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.
  5. பின்பு அதனுடன் நீளவாக்கில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பொடியாக பூண்டு, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். சேர்ந்த பொருட்கள் நன்கு வதங்கியவுடன் சிக்கன் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
  6. சிக்கன் சிறிது நேரம் வெந்தவுடன் அதில் தயிர் சேர்த்து கிளறி விட வேண்டும். தயிர் சேர்த்த பிறகு அவற்றில் அரிசியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
  7. பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். பின்பு ஒரு கப் தேங்காய் பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
  8. பின்பு மீதியுள்ள கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும், 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்க வேண்டும்.
  9. அவ்வளவுதான் சுவையான சிக்கன் புலாவ்  தயார்.  சுடசுட அனைவருக்கும் பரிமாறவும்.