மாலை நேரம் டீ, காபியுடன் சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்காய் பக்கோடா இப்படி செஞ்சி பாருங்க!

Summary: பலாக்காயில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் இரும்புசத்து, பொட்டாசியம், கால்சியம், புரதம் போன்ற சத்துகளும் உயர்தரமான மாவுச் சத்து மற்றும் நார்ச் சத்தும் உள்ளது. இது விரைவாக மற்றும் சுலபமாக செய்யக் கூடியது. மழைக்காலத்தில் சூடான மிருதுவான பக்கோடா என்றால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். பக்கோடாவை கடையில் வாங்குவதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில், வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.

Ingredients:

  • 1 பலாக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் கார்ன் மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் நறுக்கிய பச்சைமிளகாய்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 வாணலி

Steps:

  1. முதலில் பலாக்காயை கழுவி தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. பின் நறுக்கிய பலாகாயை குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விட்டு வேக வைத்து எடுக்கவும். பிறகு குக்கரை திறந்து தண்ணீரை வடிகட்டி பலாக்காயை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மிளகாய்த்தூள், கார்ன் மாவு, மைதா மாவு, உப்பு, பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பாலாக்காயை மாவில் முக்கி‌‌ எண்ணையில் சேர்த்து பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
  6. அவ்வளவுதான் சுவையான மற்றும் மொறு மொறு பலாக்காய் பக்கோடா தயார்.