சுட சுட சாதத்துடன் போட்டு சாப்பிட ருசியான காளான் குழம்பு இப்படி செஞ்சி பாருங்கள்!

Summary: ஆரோக்கியமுள்ள உணவுகளை சமைத்து கொடுப்பது என்பதுமிகப்பெரிய பரீட்ச்சையாகவே இருக்கும். ஏனெனில் குழந்தைகளும் சரி, வீட்டில் உள்ள மற்றவர்களும்சரி, ஆரோக்கியமான காய்கறிகளை தவிர்ப்பதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். எனவே சத்தானஉணவுகள் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுப்பதில்லை. எனவே குழந்தைகள் விரும்பும்விதத்திலும், சுவையிலும் சத்தான உணவு வகைகளை செய்து கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகிறது.அவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த காளான் குழம்பை எவ்வாறு கறிக்குழம்பின் சுவையில் சமைப்பதுஎன்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Ingredients:

  • 250 கிராம் காளான்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 பட்டை
  • 2 ஏலக்காய்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 வெங்காயம்
  • உப்பு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 3 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை
  • 1 தக்காளி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய்மற்றும் சீரகம் சேர்த்து கலந்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தினை சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  2. இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  3. பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துநாம் மேல்குறிப்பிட்டுள்ள அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து கூடவே பச்சைமிளகாய் மற்றும்கருவேப்பிலை சேர்க்கவும் .
  4. மீண்டும் அதனை நன்றாக வதக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியினை சேர்க்கவும்.
  5. பிறகு இதனை தண்ணீர் சேர்த்து நன்றாக வேகா விடவும்.பிறகு, காளான் சேர்த்து நன்றாக கலந்து வேகவிட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி8 முதல் 10நிமிடம் வரை விட்டு பிறகு மூடியினை திறந்தால் சுவையான காளான் குழம்பு தயார்.