எவ்வளவு செய்தாலும் காலியாகும் இனி காலிஃபிளவர் வாங்கினால் இப்படி சுக்கா செய்து பாருங்கள்!

Summary: ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். பொதுவாக காய்கறி வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காயாக காலிஃப்ளவர் பார்க்கப்படுகிறது. இதனைக் கொண்டு பொரியல், கறி, பக்கோடா மற்றும் சிப்ஸ் வகைகளை சமைக்கலாம். இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிஃபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. இந்த பதிவில் காலிஃப்ளவரை வைத்து மட்டன் சுக்காவிற்கு இணையான சுவையில் காலிஃப்ளவர் சுக்கா எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.

Ingredients:

  • 1 காலிஃபிளவர்
  • 10 பல் பூண்டு
  • 1 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 2 வர ‌மிளகாய்
  • 2 சோம்பு, பட்டை, கிராம்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் காலிஃப்ளவர் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து அதில் காலிஃப்ளவரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. ஒரே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மல்லி, பட்டை, கிராம்பு, வரமிளகாய், மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
  4. பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  6. அதன்பிறகு மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அதில் காலிஃப்ளவரை சேர்த்து வதக்க வேண்டும்.
  7. பிறகு அதில் நாம் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறவும். ஐந்து நிமிடம் நன்றாக கிளறி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  8. அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான காலிஃப்ளவர் சுக்கா தயார்.