சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ருசியான சௌசௌ கிரேவி இப்படி செஞ்சி பாருங்க!

Summary: வித்தியாசமான கிரேவி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சமையல் குறிப்பு உங்களுக்கு கைகொடுக்கும். சௌசௌ நீர்ச்சத்து நிறைந்த ஒரு காய்கறி. இந்த  நம்முடைய உணவோடு இதை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்குமிகவும் நல்லது. எப்போதும் போல சௌசௌ குழம்பு, சௌசௌ கூட்டு, செய்யாமல் இந்த மசாலாவை  செய்து பாருங்கள்.இது சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். சப்பாத்திக்குமட்டும் இல்லாமல், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல்வித்தியாசமான இந்த சௌசௌ கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்

Ingredients:

  • 200 கிராம் சௌசௌ
  • 1 வெங்காயம்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 50 கிராம் வேர்க்கடலை
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 2 கிராம்பு
  • 1 சிறிய துண்டு பட்டை
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சௌசௌ எடுத்து, தோல் சீவி அதை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மீடியம் சைஸில் இருக்கும் 1 வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.
  2. அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை – 50 கிராம், சோம்பு – 1/2 ஸ்பூன், கிராம்பு – 2, பட்டை – 1 சிறிய துண்டு, போட்டு முதலில் தண்ணீர் ஊற்றாமல் பொடித்துக் கொண்டு, அதன் பின்பு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.
  3. இப்போது கடாயை அடுப்பில் வைத்து கிரேவியை தாளித்து விடலாம். கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சோம்பு – 1/2 ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும், இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை – 1 கொத்து, நறுக்கி வைத்திருக்கும் சௌசௌகளை இதில் சேர்த்து, 2 நிமிடம் போல வதக்கி விட்டு, 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி, ஒரு மூடி போட்டு சௌசௌவை வேக வையுங்கள். 5 நிமிடம் சௌசௌ வேகட்டும்.
  4. தண்ணீர் எல்லாம் சுண்டி சௌசௌ வெந்து வந்ததும் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன், சேர்த்து சௌசௌவை நன்றாக வதக்கி விட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, கலந்து விட்டு மூடி போட்டு மீண்டும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிரேவியை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  5. மீதம் வேக வேண்டிய சௌசௌ, அறவையில் இருக்கும் பச்சை வாடை, அனைத்தும் நீங்கி கிரேவி கொதித்து வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு இதில் கொத்தமல்லி தழைகளை தூவி சுடச்சுட ருசித்து பாருங்கள். இதனுடைய வாசனையே அவ்வளவு சூப்பராக இருக்கும்.
  6. சுடச்சுட சப்பாத்தி, நான், பூரி, இவைகளுக்கு இது ஒரு வித்தியாசமான சைடிஷ்.