பாரம்பரிய ருசியில் உப்புகண்டம் தொக்கு இப்படி செஞ்சி பாருங்க! இதன் டேஸ்ட் வேற லெவலா இருக்கும்!

Summary: உப்புகண்டத்தை எப்படி செய்றது அப்படினா வருஷத்துக்கு ஒரு தடவை சிலர் வீட்ல ஆடு எடுத்து வெட்டி வீட்டிலேயே செய்வாங்க. அப்படி செய்யும்போது சமையலுக்கு போக அதுல நிறைய கறி என்ன பண்ணுவாங்கன்னா மஞ்சள் தூள் உப்பு போட்டு பிசறி நல்ல வெயில்ல காய வச்சு எடுத்து வச்சிருப்பாங்க. அது வருஷம் பூராவுமே நம்ம  சாப்பாட்டுக்கு யூஸ் பண்ணி சாப்பிடலாம். ரொம்பவே சுவையா இருக்கும். அப்படி அந்த உப்புக்கண்டத்தை யூஸ் பண்ணி இன்னைக்கு நம்ம ஒரு தொக்கு செய்ய போறோம். இந்த தொக்கு பழைய சாதத்தோடையும் தயிர் சாதத்தோடையும் சாப்பிடறப்போ அவ்ளோ ருசியா இருக்கும்.

Ingredients:

  • 1 கப் உப்புகண்டம்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 4 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் உப்பு கண்டத்தை எடுத்து நன்றாக சுத்தியல் அல்லது இஞ்சி தட்டும் கல்லில் நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். உப்பு கண்டம் சற்று கடினமாக இருப்பதால் நசுக்கி உணவு செய்ய ஆரம்பிக்கும் பொழுது சேர்த்துக் கொண்டால் அவை வெகு சீக்கிரமாகவே வெந்துவிடும்.
  2. உப்பு கண்டத்தை நசுக்கி எடுத்து சிறிது வெந்நீரில்போட்டு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  3. பிறகு அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு பொடியாக நறுக்கிய பூண்டு, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
  4. இதில் நசுக்கி வைத்துள்ள உப்பு கண்டத்தை சேர்த்து நன்றாக வதக்கி விடவும். உப்பு சேர்ப்பதற்கு முன்பு ருசி பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் உப்பு கண்டத்தில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பதால்  ருசிக்குமட்டும் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  5. பிறகு மிளகாய்தூள் சேர்த்து நன்றாக வதக்கி விடவும். உப்பு கண்டத்தில் உள்ள கொழுப்பே எண்ணெயை விட்டு வரும் ஆகையால் அதிக அளவு எண்ணெய் சேர்க்க வேண்டாம்.
  6. சிறிதளவு தண்ணீர் தெளித்து கிளறி விடவும் அப்படி ஒரு பத்து நிமிடம் நன்றாக வதக்கி கிளறி விட்டால் மசாலாக்களின் பச்சை வாசனை சென்று கெட்டியாக தொக்கு போன்று வந்துவிடும்.
  7. இப்பொழுது தொக்கை ஒரு பிளேட்டிற்கு மாற்றி பழைய சாதத்துடன் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது ருசி அபாரமாக இருக்கும்.