மதிய உணவுக்கு ஏற்ற காராமணி சாதம் இப்படி செஞ்சி பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!

Summary: ஆரோக்கியமான உணவுகளையும் சமையலில் சேர்த்துக் கொடுக்க இவ்வாறு காராமணி சேர்த்து வெரைட்டி சாதம் செய்து கொடுத்துப் பாருங்கள். காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள், விட்டமின் சி, புரதம் ஆகியவை சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றன. காராமணி சாதம், குழந்தைகள் நிச்சயம் தட்டாமல்சாப்பிட்டு முடிப்பார்கள். இதில் காரம் குறைவாக குழந்தைகளுக்கு ஏற்றது போல் சமைத்துகொடுக்க முடியும். வாருங்கள் இந்த சுவையான காராமணி சாதத்தை எவ்வாறு செய்ய வேண்டும்என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 1/2 கப் அரிசி
  • 1/2 கப் காராமணி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 ஸ்பூன் சாம்பார் பொடி
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 3 ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் உப்பு
  • 2 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/2 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கொத்து கொத்தமல்லித்தழை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதல் நாள் இரவே அரை கப் காராமணியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும்.
  2. பிறகு மறுநாள் காராமணியை குக்கரில் சேர்த்து,அதனுடன் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்துவிட்டு, அடுப்பின் மீது வைத்து, 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
  3. பிறகு ஒன்றரை கப் அரிசியை கழுவி பாத்திரத்தில் வைத்து, உதிரியாக சாதம் வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயைவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன்கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  4. பின்னர் இதனுடன் ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்த்து, கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியையும் இதனுடன் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விட வேண்டும்.
  5. பிறகு இவற்றுடன் மஞ்சள் தூள், சாம்பார் பொடி,மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக கலந்துவிட வேண்டும். இவை அனைத்தும் நன்றாகவதங்கியதும் வேகவைத்த காராமணியை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். சிறிது நேரத்தில் இவை சிவந்து வந்ததும் இறுதியாக கொத்தமல்லித்தழை மற்றும் வடித்து வைத்த சாதம் சேர்த்து கலந்து விட்டால் போதும். சுவையான காராமணி சாதம் தயாராகி விடும்.