ருசியான நண்டு மசாலா இந்த முறையில் வைத்து பாருங்க வீடே கமன்னனு இருக்கும்! இதோட வாசம் பக்கத்து வீடு வரை போகும்!

Summary: நண்டுகள் கடலில் மட்டும் தான் உணவா இருக்கா அப்படின்னு பார்த்தா அப்படி எல்லாம் கிடையாது நண்டு  கடல்நண்டு, வயல் நண்டு , ஆற்று நண்டு குளத்து நண்டு  , வயல்நண்டு அப்படினு எங்கெங்கெல்லாம் நண்டுகள் கிடைக்குதோ எல்லா நண்டுகளுமே சாப்பிடறதுக்கு ஏத்து நண்டுகள் தான். வீட்டை சுத்தி தண்ணி தேங்கி இருக்கிற இடங்கள் இருந்தாலோ இல்ல வயல்கள் பக்கத்துல இருந்திங்கனா கூட வயல்ல நிறைய நண்டுகளை பார்க்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு. இப்படி நண்டு சாப்பிடும் போது நமக்கு நிறைய கால்சியம் கிடைக்குது. சரி வாங்க எப்படி சுவையான நண்டு மசாலா செய்யலாம்னு பார்க்கலாம்.

Ingredients:

  • நண்டு
  • மிளகாய்தூள்
  • மஞ்சள்தூள்
  • இஞ்சி பூண்டு விழுது
  • வெங்காயம்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் நண்டை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  2. பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  3. பிறகு மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது , பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதில் தக்காளி சேர்த்து நன்றாக குழைய வதக்கவும்.
  4. பின் அதில் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள நண்டை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  5. பின்பு அதில் மிளகாய் தூளை சேர்த்து நன்றாக கிளறி விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக நண்டை கொதிக்க விடவும். நன்றாக மூடி போட்டு நண்டை வேக வைக்கவும்.
  6. நன்றாக நண்டு.வெந்த பிறகு மசாலாக்களோடு  நண்டை கலந்து விட்டு கொத்தமல்லி தலை தூவி இறக்கினால் சுவையான ருசியான நண்டு மசாலா தயார்.