தீபாவளி ஸ்பெஷல் ஈஸியாக ஜாங்கிரி இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! சாப்பிடவே அருமையாக இருக்கும்!

Summary: தீபாவளி பலகாரங்கள் செய்து கொண்டு இருக்கும் போது ரொம்பவே சுலபமா எல்லாருக்கும் பிடிச்ச ஜாங்கிரி எப்படி  ரொம்ப சுலபமா செய்றது அப்படின்னு பார்க்கலாம். ஜாங்கிரிஅப்படின்னாலே அது சிகப்பு கலர்ல தான் இருக்கும். உங்களுக்கு புடிச்சிருந்துச்சுன்னா நீங்க ஜாங்கிரியை என்ன கலர்ல வேணாலும்  செய்யலாம்.ஏன்னா நீங்கள் சேர்க்க போற ஃபுட் கலர் பொறுத்து ஜாங்கிரி ஓட கலர் மாறிடும்.உங்களுக்கு விருப்பம் இருந்தா தேசியக்கொடி கலர்ல விதமா நீங்க ஜாங்கிரியை கூட செய்து அசத்தலாம் வாங்க.

Ingredients:

  • 1 கப் வெள்ளை உளுந்து
  • 1 கப் சீனி
  • 1 ஸ்பூன் சிகப்பு ஃபுட் கலர்
  • 1 ஸ்பூன் ஏலக்காய்
  • 1/2 எலுமிச்சை பழம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் வெள்ளை உளுந்தை நன்றாக கழுவி விட்டு ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு அரை மணி நேரம் ஊறிய உளுந்தை நன்றாக மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் தண்ணீர் சேர்க்காமல் மிருதுவாக கட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. அரைத்து வைத்துள்ள மாவில் சிறிதளவு சிகப்பு நிற ஃபுட் கலரை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு நன்றாக பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
  3. இந்த சர்க்கரை தண்ணீரில் சிகப்பு நிற புட் கலர் ஏலக்காய் சேர்த்து நன்றாக கலந்து விடவும் .ஓரளவிற்கு சீனி பாகுபதம் வந்த பிறகு அதில் அரை எலுமிச்சம் பழச்சாறை கலந்து நன்றாக கலந்து விட்டு வைத்து விடவும்.
  4. இப்பொழுது ஒரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி என்னை காய்வதற்குள் ஒரு பிளாஸ்டிக் பாக்கெட் அல்லது பால் கவர் ஏதோ ஒரு பொருளை எடுத்துக்கொண்டு அதில் இந்த ஜாங்கிரிக்கு கலந்து வைத்துள்ள உளுந்து மாவை நிரப்பி நுனியை மட்டும் மெலிதாக நறுக்கிவிடவும்.
  5. எண்ணெய் காய்ந்ததும் நேரடியாக எண்ணெயில் வட்ட வடிவமாக மூன்று இழைகள்  ஜாங்கிரிபோல் பிழிந்து விட்டு எடுத்து விடவும்.
  6. இதே போல் மாவு அனைத்தையும் ஜாங்கிரிகளாக வட்டமாக பிழியவும் ஒருபுறம் வெந்த பிறகு மறுபுறம் ஜாங்கிரிகளை திருப்பி போட்டு நன்றாக வெந்தவுடன் எடுக்கவும்.
  7. அவற்றை வடி எடுத்து காய்ச்சி வைத்துள்ள சூடான சர்க்கரை பாகில் சேர்க்கவும்.
  8. ஜாங்கிரிகள் சர்க்கரைப் பாகில் மூழ்கி நன்றாக பாகை இழுத்து உள்ளே இழுத்தவுடன் அவற்றை வெளியே எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைத்து விடவும்.
  9. பாகு சொட்டு சொட்ட சுவையான தீபாவளி ஸ்பெஷல் ஜாங்கிரி தயார்.