மூன்று விதமாய் முடக்கத்தான் தோசை வீடே கமகமக்க இப்படி செஞ்சி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: முடக்கறுத்தான் தோசை உடலுக்கு அத்தனை நன்மைகளை தரக்கூடியது. கால்களையும் மூட்டு வலிகள் முடக்குவாதம்போன்ற நோய்களுக்கு இந்த முடக்கறுத்தான் நல்ல மருந்தாக இருக்கிறது. இது ஒரு கொடி வகையானசெடியாக இந்த செடியில் உள்ள இலைகளை மட்டும் பறித்து விட்டு நன்றாக சுத்தம் செய்துவிட்டுமாவாக அரைத்து தோசை ஊற்றி உண்பார்கள். முடக்கறுத்தான் தோசை மிகவும் எளிமையாக எப்படி செய்யலாம்என்று பார்க்க இருக்கிறோம். மூன்று விதமான முடக்கறுத்தான் தேசை செய்வது  என்றுதெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 1/2 கிலோ இட்லி அரிசி
  • 1 கப் முடக்கறுத்தான் இலைகள்
  • 50 கிராம் வெந்தயம்
  • 4 ஸ்பூன் உளுந்து
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் இட்லி அரிசியோடு உளுந்து இவற்றை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சுத்தமாக கழுவி விட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். 50 கிராம் வெந்தயத்தை சேர்த்து அதையும் அரச ஊறவைக்கும் பொழுதே தனியாக ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பிறகு முடக்கறுத்தான் இலைகளை தனியாக எடுத்து நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு மணி நேரம் அரிசியும் உளுந்தும் சேர்ந்து ஊறிய பிறகு வெந்தயமும் ஊறிய பிறகு கிரைண்டரை சுத்தம் செய்து விட்டு அதில் முதலில் வெந்தயத்தை மட்டும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்..
  3. வெந்தயம் நீர் தெளித்து அரை கரைக்க நன்றாக வந்து போல் அரைபட்டு வரும் அப்படி அரைபட்டு வந்த பிறகுஅந்த வெந்தயத்தை தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துவிட்டவும்.
  4. சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள முடக்கறுத்தான் இலைகளை நன்றாக கழுவி விட்டு கிரைண்டரில் சேர்த்து அரைத்து எடுக்கவும்.இந்த முடக்கறுத்தான் இலைகள் அரைபடும் பொழுது சற்று சிக்கிக் கொள்ளும் அவற்றை நன்றாக விலக்கி எடுத்துவிட்டு எடுத்துவிட்டு எடுத்துவிட்டு அரைக்க வேண்டும்.
  5. அப்படி அரௌத்த பிறகு முக்கால் பதம் அறைந்த பிறகு அதில்அரிசியை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து  கொள்ளவும்.உளுந்தோடு அரிசி மாவு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
  6. முதல் நாள் இரவில் இவ்வாறு செய்துவிட்டு மறுநாள்காலை மாவு புளித்த பிறகு நன்றாக மொறு மொறுவென தோசையை ஊற்றி எடுத்து காரச்சட்டினியோடுசேர்த்து சாப்பிட்டால் ருசி அவ்வளவு அருமையாக இருக்கும்..
  7. அடுத்த ஏற்கனவே  இட்லி அல்லது தோசை மாவு அரைத்து வைத்திரீக்கிரீர்கள் என்றால் வெறும் முடக்கறுத்தான் இலைகளை மட்டும் சுத்தம் செய்து கழுவி விட்டு மிக்ஸியில் அரைத்து ஏற்கனவே செய்து வைத்துள்ள இட்லி மாவில் கலந்து தோசையாக வார்த்தெடுத்துக் கொள்ளலாம்.
  8. அப்படி இல்லை என்றால் முடக்கறுத்தான் இலைகளை நன்றாக கழுவி விட்டு பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்..
  9. தோசை கல்லில் தோசையை ஊற்றி அதன் மேல் நறுக்கி வைத்துள்ள முடக்கறுத்தான் இலைகளை தூவி எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு எடுத்தால் மொறு மொறு வென்று முடக்கறுத்தான் தோசை தயார் முடக்கறுத்தான் தோசைக்கு பெஸ்ட் நீ என்று பார்த்தால் அது காரச் சட்னி தான்.