உடலுக்கு ஆரோக்கியமான, சுவையான முடக்கத்தான் கீரை சட்னி செய்வது எப்படி ?

Summary: நாவின் ருசிக்காக சட்னிகளை வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில சட்னிகளை சாப்பிடலாம். அப்படி இன்று நாம் பார்க்க போகிற சட்னி முடக்கத்தான் கீரை சட்னி முடக்கத்தான் கீரையை நாம் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் வயது முதிர்ந்தவர்களுக்கு வரும் மூட்டு வலி பிரச்சனைகள், வாத பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளும். மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமலும் நம்மை பாதுகாக்கும், சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த முடக்கத்தான் கீரை அரைத்து அந்த இடங்களில் பூசி வந்தால் சரியாகிவிடும்.

Ingredients:

  • 1 கட்டு முடக்கத்தான் கீரை
  • 1 கட்டு கொத்தமல்லி
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு புளி
  • 2 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 2 வர மிளகாய்
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முடக்கத்தான் கீரை கசப்பு தன்மை வாய்ந்தது அதன் கசப்பு தன்மை இல்லாமல் நம் உணவில் எடுத்துக் கொள்வதற்காக அதனுடன் சம அளவு கொத்தமல்லியையும் சேர்த்து நாம இந்த சட்னி செய்ய போகிறோம் அதனால் முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  2. எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும். பின் இதனுடன் நம் தோல் உரித்து வைத்திருக்கும் 10 சின்ன வெங்காயம், ஒரு துண்டு புளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  3. பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கி அதன் பின் இதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி பின் முடக்கத்தான் கீரை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கீரையும், கொத்தமல்லியும் நன்கு வதங்கி வந்ததும் கடாயை இறக்கி, வதக்கிய பொருட்களை குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு வதக்கிய பொருள்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் இரண்டு பல் பூண்டு ஒரு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடைய அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
  5. எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு, இரண்டு வரமிளகாய் மற்றும் சிறித கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொண்டு. பின் இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான முடக்கத்தான் கீரை சட்னி தயார்.