இந்த தீபாவளிக்கு வீட்டில் தித்திக்கும் சுவையில் காசி ஹல்வா செய்து அசத்துங்கள்!

Summary: ஹல்வாஎல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஹல்வாவ நீங்க பூசண ஹல்வானு கேள்விப்பட்டிருப்பீங்களா இல்ல காசி ஹல்வா கேள்விப் பட்டிருப்பீங்களான்னு தெரியல எந்த பேர்ல சொன்னாலும் ஹல்வா ரொம்பவே சுவையா இருக்கும். நீங்க உங்களுக்கு புடிச்ச பேர சொல்லிக்கோங்க சொல்லலாம் இல்ல காசி ஹல்வானு சொல்லலாம். இந்த காசி அல்வாவை வீட்டில் ரொம்ப ருசியா எப்படி செய்யறது அப்படின்னு இந்த பதிவில் பார்க்க போறோம். வாங்க இந்த சுவை மிக்க காசி ஹல்வா எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 1 கப் பூசணிக்காய் துருவல்
  • 3/4 கப் சீனி
  • 1/2 ஸ்பூன் ரெட் ஃபுட் கலர்
  • 1/4 ஸ்பூன் உப்பு
  • 1 சிட்டிகை பச்சை கற்பூரம்
  • 1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 3 ஸ்பூன் நெய்
  • 5 முந்திரி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு துண்டு பூசணிக்காயை எடுத்து கேரட் துருவுவதில் பொடியாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். துருவி எடுத்துள்ள பூசணிக்காயை ஒரு வடிகட்டி அல்லது ஒரு வெள்ளை துணியில் வைத்து பூசணிக்காய் தண்ணீர் தனியாக பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின் அடுப்பில் கடாயை வைத்து அதில் பிழிந்து எடுத்து வைத்துள்ள பூசணிக்காய் நீரை ஊற்றி நன்றாக பச்சை வாசனை போகும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும். பூசணிக்காய் தண்ணீர் கொதித்த பிறகு அதில் தனியாக எடுத்து வைத்துள்ள பூசணிக்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  3. பூசணிக்காய் தண்ணீர் வற்றி நன்றாக பூசணிக்காய் துருவல் வெந்த பிறகு அதில் முக்கால் கப் அளவிற்கு சர்க்கரை அதாவது சீனி சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கிளற வேண்டும். சீனி நன்றாக பாகு பத்ததிற்கு வெந்த பிறகு அதில் சிவப்பு நிற ஃபுட் கலரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  4. ஃபுட் கலரே கலந்து ஒரு ஐந்து நிமிடம் கொதித்த பிறகு அதில் சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  5. பிறகு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து இந்த பூசணி ஹல்வாவை நன்றாக கலந்து விட வேண்டும்.  இந்தபூசணி ஹல்வா பதம் வந்த பிறகு அதில் கால் டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கிளற வேண்டும். அப்படி எலுமிச்சை சாறு கலந்து கிளறினால் அல்வா கெட்டிப்படாமல் அதே பதத்தில் இருக்கும்.
  6. பிறகு முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும.வறுத்து வைத்துள்ள முந்திரிகளை ஹல்வாவில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான சூடான காசி ஹல்வா தயார்.