Summary: சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. மசாலா பொருட்களுடன் சேர்த்து செய்யப்படும் இந்த கட்லெட் எளிதாக நாவில் கரையக் கூடியதாக இருக்கும். இந்த கட்லெட் வித்தியாசமான தனி சுவையைக் கொடுக்கும். மட்டன் கட்லெட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும். அது தவிர திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக செய்வதற்கு ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர்களும் மட்டனால் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.