தீபாவளி ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா செய்முறை எளிமையாக செய்யலாலாம்! மிஸ் பண்ணாம செஞ்சி பாருங்க!

Summary: நம்ம இந்த ரிப்பன் பக்கோடா நல்ல மொறு மொறுன்னு சுவையா எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க போறோம். இந்த ரிப்பன் பக்கோடாக்கள் எல்லாம் வந்துட்டு ஒரு டைம்ல கடைகளில் மட்டுமே வாங்கி சாப்பிடற மாதிரி இருந்துச்சு. அதுக்கு அப்புறம் அதெல்லாம் வீடுகள்ல செய்ய ஆரம்பித்தார்கள் அப்போ நமக்கு இதெல்லாம் புது விஷயமாக இருக்கும் 80கள் 90களில் இந்த பலகாரம் செய்றாங்க அப்படின்னாலே அது  நம்மவீட்ல புதுசா ஒரு பலகாரம் செய்து இருக்காங்க அப்படிங்கிற அளவுக்கு இருக்கும்.

Ingredients:

  • 1 கப் அரிசிமாவு
  • 12 கப் கடலைமாவு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 சிட்டிகை பெருங்காயதூள்
  • 1 ஸ்பூன் எள் அல்லது சீரகம் அல்லது ஓமம்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த அரிசி மாவோடு கடலை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  2. பிறகு மிளகாய் தோலை சேர்த்து கலந்து கொண்டு அதில் உப்பு பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
  3. அதில் லேசான சூட்டில் உள்ள எண்ணெயை சேர்த்து மாவை பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு முறுக்கு உரலில் வத்தல் பிழியும் அச்சை போட்டுக் கொண்டு பிசைந்து வைத்துள்ள ரிப்பன் பக்கோடா மாவை முறுக்கு உரலில் சேர்த்து கொள்ளவும்.
  4. பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய விடவும். என்னை காய்ந்ததும் உரலை எடுத்து நேரடியாக அப்படியே எண்ணெயில் பக்கோடா ஒரு இரண்டு மூன்று சுத்துக்கள் சுற்றி பிழியவும்.
  5. 5 நிமிடம் வெந்த பிறகு திருப்பி போடவும் இரண்டு புறமும் நன்றாக வெந்து எண்ணெயில் சலசலப்பு வருவது அடங்கிய பிறகு எடுத்து லேசாக உடைத்து விட்டால் சுவையான மொறு மொறு ரிப்பன் பக்கோடா தயார்.