ருசியான மட்டன் நுரையீரல் கிரேவி செய்வது எப்படி ?

Summary: பெரும்பாலான வீடுகளில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆனால் சிக்கன், மட்டன், மற்றும் மீன் போன்ற உணவுகளின் கறி மட்டும் தான் சமைக்கின்றனர். அதையும் தாண்டிய பட்சத்தில் சிலர் சிக்கன் பிரியாணி, சிலர் மட்டன் பிரியாணி செய்கிறார்கள் இது தான் நம் சாப்பாட்டு முறைகள். புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள் என்றால் ஆட்டின் நுரையீரலில் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள். இது உங்களுக்கு மிகவும் பிடித்த உணவாக மாறிவிடும் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். அது மட்டுமல்லாமல் ஆடு நுரையீரலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் வேறு உண்டு. இதை எப்படி தயார் செய்வது, தேவையான பொருட்கள், மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.

Ingredients:

  • 250 KG ஆடு நுரையீரல்
  • 2 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 tbsp இஞ்சி,பூண்டு விழுது
  • 2 tbsp மிளகாய் தூள்
  • கருவேப்பிலை
  • 2 பச்சைமிளகாய்
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 கப் தேங்காய் பால்
  • 2 tbsp தயிர்

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 மீடியம் அளவு தட்டு
  • 1 மிக்ஸி

Steps:

  1. செய்முறை
  2. முதலில் கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவை அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  3. அதன் பிறகு ஆட்டின் நுரையீரலை நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள் பின்பு நுரையிரலை தூண்டு தூண்டாக வெட்டி கொளுங்கள்.
  4. பின்பு அரை ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் இந்த மாசலா கலவையை வெட்டி வைத்த நுரையீரலுடன் சேர்த்து பிரட்டி எடுத்து விட்டு 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  5. ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் எண்ணெய் காய்ந்தவுடன் கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு நன்றாக தாளிக்கவும்.
  6. அதற்கு அப்பறம் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள் வெங்காயம் பொன்னிறமாக வந்ததும்.
  7. நறுக்கிய தக்காளி தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்டையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை, தக்காளியின் மென்மையாக வரும் வரை வதக்கவும்.
  8. பின் அதனுடன் நம் வெட்டி ஊற வைத்த நுரையீரலை சேர்த்து நன்றாக பெரட்டி கிளறி விடவும், தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி விடவும்.
  9. நுரையீரல் பாதி வெந்த நிலையில் இருக்கும்போது அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி வேக வைக்கவும்.
  10. நுரையீரல் நன்றாக கொதித்து கிரேவி தனியாக என்னை தனியாக பிரிந்து வரும் நிலையில் அடுப்பினை அனைத்து கிரேவி இறக்கிவிடவும், பின் கொத்தமல்லியை சிறிய அளவு தூரி விடவும் இப்பொழுது சுவையான ஆட்டு நுரையீரல் கிரேவி தயாராகிவிட்டது.