Summary: குழம்பு சாதம் இந்தியாவில் மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவு முறை. குறிப்பாக தென்னிந்தியாவில் அனைவரது இல்லங்களிலும் வழக்கமாக குழம்பு சாதம் தான் செய்து உண்பார்கள். பல விதமான சாதம் உள்ளது அதில் சாம்பார் சாதம், பருப்பு சாதம், புளி சாதம், தக்காளி சாதம் போன்றவற்றை மக்கள் வழக்கமாக செய்து சுவைப்பார்கள். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான கொண்டைக்கடலை சாதம். இந்த சாதத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் கொண்டைக்கடலை, வெங்காயம், மற்றும் தக்காளி இருந்தால் போதும் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம். அது மட்டுமின்றி நாம் வழக்கமாக செய்து உண்ணும் சாதத்திற்கு இவை ஒரு அருமையான மாற்றும் கூட.